Monday, 5 March 2018

மார்ச் மாதம் பிறந்துள்ள ஓய்வூதியர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கூட்டம்  08-03-18 அன்று காலை 10-00 மணி அளவில் வெகு விமரிசையாக , நம் சங்க CTO அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது . இம்மாதம் பிறந்த நாள் காணும் அனைத்து ஓய்வூதியர்களையும் வருக !, வருக !! என இரு கரம் கூப்பி தவறாது வருகை புரிய கோவை மாவட்ட சங்கம் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறது.

அகில உலக மகளிர் தினம் நமது சங்க அலுவலக வளாகத்தில் 10-03-2018  சனிக்கிழமை  அன்று காலை 10-00 மணிக்கு விமரிசையாக நடைபெற உள்ளது . சிறப்பு விருந்தினர்களாக திருமதி உமா கணேசன் CAO  மற்றும் திருமதி .தேன்மொழி AO, மற்றும் தபால் இலக்காவிலிருந்து இரண்டு AO அதிகாரிகள்   கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். 
உலக மகளிர் தின விழாவினை  உலகமே போற்றும் வண்ணம் தமிழ் மாநில துணை செயலர் தோழியர் . சிவகாம சுந்தரி அவர்களின் சீரிய தலைமையில் தோழியர்கள் கல்யாணி ஹரிஹரன், பவானி, கமலா பாலசுப்ரமணியன், J .ஜோதிமணி , K.R. உமா  மற்றும் சகுந்தலா அவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு வெற்றிகரமாக நடத்த இருக்கிறார்கள் . மாவட்ட செயலர் தோழர் அருணாசலம் நெறிப்படுத்துவார்.

ஒரு முக்கிய அறிவிப்பு மெடிக்கல் அலவன்ஸ் பெற கணவன் அல்லது மனைவி பணியில் இருந்தால் , அவர்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து தடை இல்லை சான்றிதழ் ( No objection certificate ) பெற்று AO  விடம் கொடுக்க வேண்டும் . அதற்கான முறையான படிவம் ( Form ) AO அவர்களிடமிருந்து பெற்று spouse பணிபுரியும் இடத்திலிருந்து கையொப்பம் பெற்றுத்தரவும்.
மெடிக்கல் அலவன்ஸ் 2011 வரை ஓய்வு  பெற்றவர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.
அடுத்த இரண்டு தவணை மெடிக்கல் அலவன்ஸ் பெறுவதற்கான உத்தரவு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெறப்படும் என்று நம் அகில இந்திய செயலர் கூறியுள்ளார்.
வாழ்த்துக்களுடன் 
அருணாசலம் 
கோவை மாவட்ட செயலர்.





No comments:

Post a Comment