Tuesday, 9 January 2018

அருமைத் தோழர்களே /தோழியர்களே ,
அனைவருக்கும் தைப்பொங்கல் , தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
பொங்கும் பொங்கலைப்போல உங்கள் வாழ்வில் எல்லா மங்களங்களும் நீடித்து நிலைக்கட்டும்.
நம் உறுப்பினர்களில் பலர் தங்களுக்கு டிசம்பர் மாத ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று போன் செய்கிறார்கள். அவ்வாறு ஓய்வூதியம் கிடைக்கப்பெறாதோர் தாங்கள் மாதாமாதம் ஓய்வூதியம்  பெறும் வங்கி அல்லது தபால் அலுவலகத்தினை நாடி விபரங்கள் கேட்டறியவும். ஓய்வூதியம் கிடைக்காமைக்கு முக்கிய காரணம் Life Certificate கொடுக்கப்படாமையும் , அல்லது தங்கள் வங்கிக்கணக்கு எண்ணினுடன் ஆதார் எண்ணையும் இணைக்கப்படாமையும் முக்கிய காரணமாகும். காரணம் அதுவாயின் , ஓய்வூதியம் கிடைக்காது.பலமுறை அறிவுறுத்தியும், தகவல் கொடுத்தும் நம் உறுப்பினர்களில் சிலர் ஏனோ தவற விட்டு விடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் Life Certificate கொடுப்பதை ஒரு முக்கியப்பணியாக எடுத்துக்கொண்டு அதை வழங்க வேண்டும். நன்கு விபரமறிந்த STR தோழர் நடராசன் , கோ -அக்சியலைச் சேர்ந்த தோழர் சேகர் போன்ற தோழர்கள் Life Certificate கொடுக்க மறந்து விட்டார்கள். சில தோழர்களின் Life Certificate Updation அந்தந்த வங்கிகளைச் சார்ந்த CPPC க்கு அனுப்பப்படவில்லை. இப்போது அவைகளை அனுப்பி விட்டார்கள். எனவே அந்தந்த வங்கிகளின் ஓய்வூதியம் வழங்கும் மையம் Supplementary Roll ல் ஓய்வூதியம் Sanction ஆகும் . விரைவில் பணம் கிட்ட  வங்கி மேல் மட்டத்தில் பேசியுள்ளோம். நாம்தான் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மருத்துவ அலவன்ஸ் கோவையில் amount sanction உடன் மாநில அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநில அலுவலக கணக்கதிகாரி (நிதி) விரைவில் ERP யில் இரண்டு தவணைகளுக்கு பணம் அனுப்ப கணக்கில் சேர்ப்பார்கள். கால தாமதம் தவிர்க்க முடியாதது. மருத்துவ பில்கள் : Vendor எண்கள் அனைவருக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மாநில அலுவலகம் தேங்கியுள்ள பில்களை விரைவில் பைசல் செய்வதாக கூறியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1200  Pre 2000 ஓய்வூதியர்கள் ( DOT ) ஓய்வூதிய மாற்றம், நிலுவை ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் அனுப்பப்படும் என்று DOT CCA அதிகாரிகள் நம் தொழிற்சங்க தலைமையிடம் உறுதி அளித்துள்ளார்கள். கோவையில் Pre 2000 retirees சுமார் 200 பேர்களில் 60 பேர்களுக்கு Revised Order அனுப்பப்பட்டு கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் சுமார் 30 ஓய்வூதியர்கள் நிலுவைத் தொகை பெற்று விட்டார்கள். மீதமுள்ளோருக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. மாவட்ட செயலர் கணக்கதிகாரியிடம் தொடர்பு கொண்டு விரைவுப் படுத்தியுள்ளார். நம் எதிர்பார்ப்புப்படி சுமார் 70 ஓய்வூதியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்படலாம் . வங்கிகளில் நிலுவைத்தொகை பெறுவது ஊழியர் பற்றாக்குறை போன்ற சில காரணங்களால் கால தாமதம் ஏற்படுவது தவிர்க்க முடிடாதது.  விரைவில் வழங்க மாநில சங்கம் மூலமாக PCCP மற்றும் Postal Accounts அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்துள்ளோம்.
எனவே நம் உறுப்பினர்கள் மருத்துவ அலவன்ஸ் கிடைக்கப்பெற்றாளோ , Pre 2000 உத்தரவு வந்தாலோ தவறாமல் மாவட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும். அப்போதுதான் அவர்கள் பெற்ற தொகை கணக்கு சரியா , மற்றும் விடுபட்டு போனவர்கள் யார் யார் என அறிந்து ஆவண செய்ய முடியும்.
கோவையில் Empannel Hospital லிஸ்டில் சங்கர நேத்ராலயா ஆஸ்பத்திரியும் சேர்க்கப்பட்டுள்ளது.
தோழர்களே 60 வயதினை கடந்த நாம் இலாக்காவினுடைய சலுகைகளைப்பெறவும், குறைபாடுகளை களையவும், மிக சாதுர்யமாகவும், நட்புடனும்,செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும். இதில் கோபப்படுவதோ , வருத்தப்படுவதோ யாதொரு பலனையும் அளிக்காது. சாரி சாரி யாக புதிய உறுப்பினர்கள் நம் சிறப்பான செயல்பாடுகள் கண்டு நம் சங்கத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர். நம் உறுப்பினர் எண்ணிக்கை 690 ஆகும். இணைந்த உறுப்பினர்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம், இணைய இருக்கிற நல் உள்ளங்களை வரவேற்க காத்திருக்கிறோம்.
நம் சங்க அலுவலகம் காலை 10-00 மணி முதல் மதியம் 01-00 மணி வரை உறுப்பினர்களின் வசதிக்காக அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளைக் களைய, வருமான வரி விளக்கங்கள், வங்கி வேலைகள் , பண முதலீடு விபரங்கள் , உடல் சுகவீனமுற்றால் நகரில் உள்ள சிறந்த மருத்துவர்கள் பற்றிய குறிப்புகள் அளித்தல், உறுப்பினர்கள் இல்லங்களில் நடைபெறும் மங்கள நிகழ்வுகளில் துணி இருத்தல், உதவி புரிதல் போன்ற நற் செயல்களை செய்து வருகிறோம். இந்த நற்பணியில் நம் சங்கத்தைச்சார்ந்த தன்னார்வ உறுப்பினர்கள் ஒரு சிலர் தங்களை ஈடுபடுத்திக்கொண்டால் நம் AIBSNLPWA மாவட்ட  சங்கம் பார் போற்றும் மிகச்சிறந்த சங்கமாக மாறும் என்பது திண்ணம். 
11-01-2018 வியாழக்கிழமை காலை 10-00 மணிக்கு நம் சங்க அலுவலகத்தில் டிசம்பர் 2017 மற்றும் ஜனவரி 20018ல் பிறந்துள்ள ஓய்வூதியர்களுக்கு வாழ்த்துக்கூறும் விழா நடைபெறும். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள் 
வாருங்கள் வாழ்த்து கூறுவோம் , ஒன்றாக கூடி மகிழ்வோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
B.அருணாசலம் 
மாவட்ட செயலர்.






















No comments:

Post a Comment