தோழர்களே/தோழியர்களே
அனைவருக்கும் வணக்கம்.
தோழர் கே.முத்தியாலு
தமிழ் மாநில செயலாளர்,
தோழர் ஏ .சுகுமாரன்
தமிழ் மாநில துணைத்தலைவர்
தோழர் நா .மோகன் ,
கோவை மாவட்ட வெப் மாஸ்டர்,
மற்றும் மாநில மாவட்ட
சங்கத்தோழர்கள்/தோழியர்கள்
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.
உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தோழர்களே , சிறப்பான ஏற்பாடுகள் , சுவையான உணவு வகைகள் , கனிவான உபசரிப்பு பயனுள்ள விவாதங்கள் ,எதிர்கால திட்டங்களுக்கான நல்ல பயனுள்ள தகவல்கள் உள்ளடக்கிய காரைக்குடி செயற்குழு மாநாடு பெருவாரியான தோழர்களுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.பிள்ளையார்பட்டி அருகிலும், குபேர கடவுளின் அருளுடனும் , தமிழ் வளர்க்கும் குன்றக்குடிக்கும் பெருமை சேர்க்கும் காரைக்குடியில் மாநிலத்தலைவர் தோழர் வி.இராமாராவ் , மாநிலச் செயலர் தோழர் க .முத்தியாலு, மத்திய சங்க துணைத்தலைவர் தோழர் DG அவர்கள் அளித்த தகவல்கள் , செயல்பாடுகள் ,தொலை நோக்கப்பார்வை ஆகியவை நம் சங்க எதிர்கால பணிகளை விளக்குவதாக இருந்தது. கோவை மாவட்டத்தின் 3 மாநில பொறுப்பாளர்களும், கோவை மாவட்ட செயலாளரும் மாநில செயற்குழுவில் உரையாற்றினார்கள்.
Dy. CCA அலுவலகத்தின் தாமதங்கள் . DOT யின் ஓய்வூதியத்தை நேரடியாக வழங்கும் முறை 2007 லிருந்து 78.2% நிலுவை ,Anamoly Case துரிதப்படுத்துதல், மத்திய அரசின் 7வது சம்பளக்கமிஷன் பயன்களை நமக்கும் நீட்டிப்பது போன்றவற்றை விவாதித்த பாட்னா மத்திய செயற்குழு கூட்டத்தின் எதிர்காலப் பணியாகக் கொண்டு செய்வதை சவாலாக எடுத்துக்கொண்ட செயற்குழுவாக இருந்தது.
கோவை மாவட்ட சங்கத்தில் 2016ல் சுமார் 423 உறுப்பினர்களாக இருந்த நம் சங்கம் வளர்ச்சியுற்று 01-04-2017ல் 549 ஆக உயர்ந்து 01-11-2017ல் அதுவே 656 ஆக வளர்ந்து ,இன்றளவில் சுமார் 670 ஆக மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளோம் . அனைத்து உறுப்பினர்களின் மற்றும் சங்க நிர்வாகிகளின் கூட்டு முயற்சியின் விளைவே இது. சராசரியாக ஒரு வேலை நாளுக்கு ஒரு ஆயுட்கால உறுப்பினரை நம் மாவட்ட சங்கத்தில் உறுப்பினராக இணைத்துள்ளோம் என்பது கோவை மாவட்டத்த்தின் மாண்பிற்கு இன்னும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
மந்திராலயம் ஸ்ரீ இராகவேந்திரா மடத்தினைச்சார்ந்த தோழியர் வழங்கிய நன்கொடை, கணவருடன் சங்க அலுவலகம் வந்து நன்றியுணர்வுடன் நன்கொடை வழங்கிய தோழியர் வனஜா JTO போன்றவர்கள் நன்கொடை கொடுத்ததும் இன்னும் நூற்றுக்கணக்கானோர் சங்க அலுவலகம் தேடி வந்து நன்கொடை அளிப்பதுவும் நம் சங்கத்தின் பால் அவர்கள் கொண்டிருக்கும் பற்றும் நம்பிக்கையையும் நாம் நினைவு கூர்ந்து நன்றி பாராட்டுகிறோம்.
தோழர்களே 350 தோழர்களுக்கு 78.2% நிலுவை கணக்கிட்டுக் கொடுத்தோம்.பணமுடக்க மிருந்த காலக்கட்டத்தில் SBI அதிகாரிகளை சந்தித்து Postal Treasury க்கு பணம் பட்டுவாடா செய்து இராமநாதபுரம், குனியமுத்தூர்,சிங்காநல்லூர் ,கவுண்டம்பாளையம் ,கணபதி,சோமலூர் போன்ற பகுதிகளில் உள்ள ஓய்வூதியர்கள் மாதந்தோறும் தங்கள் ஓய்வூதியத்தை முழுமையாகப் பெற மாவட்ட சங்கம் பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டது ,
Medical Allowance W /O வவுச்சர் 400 தோழர்களுக்கு தேவையான தகவல்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளோம் .கடுமையான நெருக்கடியிலும் செயலர், தோழர் RT ,தோழர் CP போன்றவர்கள் கணக்கதிகாரி AO வை சந்தித்து ,திரு சாத்தப்பன் AAO அவர்களின் முயற்ச்சியால் CAO திரு உமா கணேசன் அவர்களின் முயற்ச்சியாலும் டிசம்பர் மாதம் 2வது வாரம் இரண்டு தவணைகளும் சேர்த்து வழங்க தயார் நிலையில் உள்ளது.அவர்களுக்கும் நன்றி.
2000க்கு முன் ஒய்வு பெற்ற சுமார் 200 DOT ஓய்வூதியர்களின் ரிக்கார்டுகள் நிர்வாகத்தில் இல்லை.இருப்பினும் சுமார் 100 ஓய்வூதியர்கள் விடுகளுக்குச் சென்று தனிப்பட்ட விண்ணப்பத்தை கொடுத்து available details பெற்று AO திருமதி தேன்மொழி அவர்களிடம் சேர்ப்பித்துள்ளோம். AO நம்மிடம் மீதமுள்ள ஓய்வூதியர்கள் விலாசங்களைக் கொடுக்க நாம் அந்த ஓய்வூதியர்களையும் அவர்கள் இல்லத்திற்கே சென்று அவர்களிடமிருந்து மனுக்களைப்பெற்று அவைகளை இலாகாவிடம் கொடுக்க இருக்கிறோம். இந்த நற்பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
E1, E2 increment நிலுவை ஓய்வூதியர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. 3 வருடங்களாக தீர்க்கபடாமல் உள்ள தோழர் மோகனனின் ஓய்வூதியம் விஷயமாக மாநில சங்கம் கடுமையான முயற்ச்சிகள் எடுத்துக்கொண்டிருந்தாலும் , இன்னமும் அந்த தோழருக்கு பலன் கிட்டவில்லை சுமார் 35 தோழர்களுக்கு 78.2% நிலுவைத்தொகை இன்னமும் கிடைக்க வில்லை. குறிப்பாக கனரா வங்கி , இந்தியன் வங்கி , கார்பொரேஷன் வங்கி மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு தாமதம் ஏற்படுகிறது. இத்தாமதங்கள் தீர்க்கப்பட வேண்டுமானால் இனி வரும் அதாலத்துக்களில் CPPC அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ளச்செய்வது ஒன்றே தீர்வாக இருக்கும்.
அருமைத் தோழர்களே ஓய்வூதியர் தின பொதுக்கூட்டத்தன்று நம்முடைய பிரச்சினைகளை விவாதிப்பதுவும் ,அனைவருக்கும் awareness கொண்டு வருவதும் ஒரு மகிழ்ச்சியான , நிறைவான சுழ்நிலையை உருவாக்குதல் நலம் பயக்குமென்று கருதுகிறேன் தினந்தோறும் நடைபெறும் பணிகள் சிறக்க நம்முடைய ஓய்வூதியர் சங்க அலுவலகத்திற்கு நம்முடைய உறுப்பினர்கள் தாமாக முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் .மருத்துவ சேவை , அலவன்ஸ் , வருமான வரி சட்ட திட்டங்கள் , அது சார்பான சந்தேகங்கள் போன்றவற்றை தீர்த்துவைக்க அனுபவம் வாய்ந்த தோழர்கள் வந்து உதவினால் கோவை மாவட்ட சங்கம் ஒரு Qualitative சங்கமாக மாறும். நம் தோழர்கள் நன்கு பயனுறுவர் மற்றோரும் நம் வழியினை பின்பற்றுவர் .உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டி ஓய்வூதியர் சிறப்புக்கூட்டத்தில் சந்திப்போம் என குறி நன்றி பாராட்டி வணங்கி விடை பெறுகிறேன்.
நன்றி ! வணக்கம் !!
இவண்
B .அருணாசலம்
மாவட்ட செயலர்
AIBSNLPWA
அனைவருக்கும் வணக்கம்.
09-12-2017
காலை 10-00 மணியளவில்
கோவை இரயில் நிலையம் எதிரில் உள்ள
"" திவ்யோதயா ஹாலில் ""
ஒரு மாபெரும்
ஓய்வூதியர் தின
சிறப்புக் கூட்டம்
நடைபெற உள்ளது.
அவ்வயமம் தோழர் கே.முத்தியாலு

No comments:
Post a Comment