Sunday, 3 September 2017

அன்பு தோழர்களே / தோழியர்களே!
வணக்கம்.
நம் கோவை மாவட்ட AIBSNLPWA சங்கத்தின் சார்பாக நம் சங்க அமைப்புதினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. 
நாள் : 09-09-2017  சனிக்கிழமை.
நேரம் :  காலை 10-00 மணி 
இடம் : PGM அலுவலக  வளாகம்.  கோவை 
பேருரை ஆற்ற இருப்பவர்கள் 
தோழர் R .வெங்கடாச்சலம்
துணை மாநில செயலர்.
தோழர்  S .ரமணி .
சேலம் மாவட்ட செயலர்.
மற்றும்  சங்க முன்னணி தோழர்கள்.
இம்மாதம் பிறந்த நாள் உள்ள தோழர்களுக்கு பிற.ந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
சங்க வரலாற்றில் சாதனை படைத்து படைத்து வருகிறது நம் கோவை மாவட்டம்.   ஆம் 
நம்முடன் புதிதாக இணைந்துள்ள சுமார் 63 தோழர்களின் ஆயுள்கால சந்தா மத்திய மற்றும் மாநில கோட்டா தோழர் RV மூலமாக மத்திய மற்றும் மாநில பொருளாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த மகிழ்ச்சி மிகு தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
மேலும் 78.2 நிலுவைத்தொகை பெற்றவர்கள் அளித்துள்ள நன்கொடையில் இருந்து மத்திய சங்கத்திற்கு ரூபாய் 50,000/- மற்றும் தமிழ் மாநில சங்கத்திற்கு ரூபாய் 25,000/- மற்றும் 63 உறுப்பினர்களின் ஆயுட்கால சந்தா என மொத்தம் ஒரு லட்ச ரூபாய் அளிக்கப்பட்ட இருக்கிறது.
சிறப்புக் கூட்ட தகவல்கள்  அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
தோழர்களே / தோழியர்களே அலைகடலென
அரங்கம்  நோக்கிதிரண்டு வாருங்கள்.
சாதனை பல படைத்து வரும் நம் சங்கத்தைப் போற்றுவோம் ,
சரித்திரம் படைத்து விட்ட கோவை மாவட்ட  சங்கத்தை பாராட்டுவோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் 
B .அருணாசலம் ,
மாவட்ட செயலர்.

No comments:

Post a Comment