அருமை தோழர்களே/தோழியர்களே ,
வணக்கம்.
உங்களை இணையம் மூலமாக சந்தித்து சில செய்திகளை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
தோழர் இராமன்குட்டி அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் சுமார் 150 உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் . மனித வளத்துறையில் பணியாற்றும் தோழியர் சிறப்புப் பேச்சாளராக இருந்து ,தோழியர் கல்யாணி ஹரிஹரன் அவர்கள் தலைமை ஏற்று 4, 5 தோழியர்கள் உரையாற்ற மகளிர் தினம் மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
தோழர் PSR ஆற்றிய உரையினை மாவட்ட உதவி தலைவர் தோழர் பெருமாள் தொகுக்க நம் வலை தளத்தில் உடனடியாக பதிவு செய்யப்பட்டது.
தோழர் PSR முக்கியமாக இரவு நேர இலவச தோலை பேசி சேவை சலுகை , பென்ஷன் ரிவிசன் ,கிராஜூடி தொகை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்திய ஆணை ,2017க்கான அஜெண்டா போன்ற வற்றை விளக்கிப் பேசினார். எதிர்காலத்தில் நீடித்த பலன்களை பெற நமக்குள் ஒற்றுமை தேவை என்று அனைத்து ஓய்வூதியர் சங்கங்களுக்கும் ஒன்றிணைய அழைப்பு விடுத்தார்.
டில்லியில் அதிகாரிகள் மட்டத்தில் இருந்த தொய்வு நீங்க உடனடியாக கடிதங்கள் அந்தந்த துறை செயலருக்கு அனுப்பிய முறை , AIBSNL HQ தலைவர்களைத் தவிர மற்ற சங்க தலைவர்களுடன் கலந்துரையாடல் நம் எதிர்கால பென்ஷன் ரிவிசன் க்கு மறுக்க முடியாத அளவிற்கு நியாயபடுத்துவதாக இருந்தது.
தோழர்களே 2007 க்கு முன் ஒய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத்தொகை வங்கி மற்றும் தபால் அலுவலகங்களுக்கும் வருகின்றன. இதில் சில குழப்பங்களும் உண்டு. குறிப்பாக 2006ல் ஒய்வு பெற்றவர்களுக்கு நிலுவைத்தொகை வந்துள்ளது.ஆனால் 2001, 2002 ஓய்வூதியர்களுக்கு வரவில்லை.இந்த உண்மை நிலையை அறிந்து கொண்டு Seniority யை அமுல்படுத்த யாருக்கெல்லாம் நிலுவைத்தொகை வந்துள்ளது , யாருக்கெல்லாம் இன்னமும் வரவில்லை என்ற தகவல் மாவட்ட சங்கத்திற்குத் தேவை
எனவே நிலுவைத் தொகை பெற்ற தோழர்கள் தாங்கள் பெற்ற தொகை, பெற்ற தேதி ஆகியவற்றை மாவட்ட சங்கத்திற்கு உடனடியாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க ஏதுவாகும்.
அதேபோல் 2007க்குப்பின் ஒய்வு பெற்றவர்களுக்கான 78.2% Fixation Memo அநேகமாக அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது..கிடைக்கப்பெறாதவர்கள் உடனடியாக Paybill Section ல் பெற்றுக்கொள்ளவும். அப்போதுதான் நிலுவைத்தொகை சரியானதா என்று கணக்கிட்டு சொல்ல முடியும். நிலுவைத்தொகையில் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது .அதற்கான விபரங்களை தெரிவித்தால் Return வாங்கி தர ஏற்பாடு செய்யமுடியும்.
Medical பில் தொகையினை பெற அனைவரும் நிர்வாகத்திற்கு சில தகவல்களை கொடுக்க வேண்டும். STR தோழர்கள் அதற்கான Format ல் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்குண்டான Format மாவட்ட சங்கத்திடம் உள்ளது கேட்டுப்பெற்று உடனடியாக பூர்த்தி செய்து நிர்வாகத்திடம் கொடுக்கவும்.அப்போதுதான் தற்சமயம் நிலுவையில் உள்ள Medical பில்கள் மற்றும் இனி கொடுக்கப்படும் பில்களுக்கும் தொகையினை பெற முடியும்.
மாவட்ட சங்கத்தை உடனே அணுகி ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
அருணாசலம் .B
மாவட்ட செயலர்.
No comments:
Post a Comment