25-03-2022 அன்று நமது மாவட்ட செயற்குழு நமது மத்திய தொலைபேசி நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை ஹாலில் சிறப்பாக நடைபெற்றது மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் தோழர் ஆர் டி அனைவரையும் வரவேற்று இன்றைய பிரச்சனைகள் பற்றி எடுத்துரைத்தார் . பல்வேறு சூழல் எதிர்பார்ப்புக்கு இடையே சுமார் 170 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது ஒரு மாவட்ட மாநாடு போல் நடைபெற்றது. தோழர் அருணாசலம், மாநில உதவிச் செயலர் தோழர் சிபி மாநில உதவித் தலைவர், குன்னூர் மாவட்ட செயலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் .
துளசிதரன் பெரியநாயக்கன்பாளையம் அவர்கள் சமீபத்தில் நமது அகில இந்திய தலைவர்கள் டெல்லியில் கலந்துகொண்டு அனைவரையும் சந்தித்தது அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற முன்னேற்றங்கள் நமது பிரச்சனைகளின் நிலைமை பற்றி பேசியது தமிழில் சிறப்பாக விவரித்தார்.
மாநிலச் செயலாளர் கலந்து கொண்டு இன்று இருக்கக்கூடிய பிரச்சனைகளான Pension Revision, Pay anomaly , Extra increment case பிரச்சனையில் நாம் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றது , Pension Revision பிரச்சனையில் நம் இன்றைய நிலை அதை எப்படி வெற்றி கொள்ள போகிறோம் , CGHIS. இன்றைய நிலை பற்றி விபரமாக அனைவருக்கும் புரியும்படி விளக்கமாக பேசினார் . பின் நமது உறுப்பினர்கள் சொசைட்டி பிரச்சனை பே ரிவிஷன் மற்றும் பல பிரச்சனைகளில் கேட்ட சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார் .
சிறப்பான மதிய உணவுக்கு பிறகு கூட்டம் இனிதே முடிவுற்றது . கூட்டம் சிறப்பாக நடைபெற்றது நமது முன்னணி ஊழியர்கள் முன்னணி தோழர்கள் ஜெகதீஸ்வரன் , மோகன் சந்திரசேகரன், ராபர்ட் , சந்திரன் , வாசு ,Kottiappan,
அருணாசலம் மற்றும் பலர் பெரிதும் முயற்சி எடுத்தனர் . சில புகைப்படங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .