Friday 17 December 2021

 

வணக்கம்.
17.12.1982 இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஓய்வூதியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மத்திய மாநில ஓய்வூதியர் களால் மிகச் சிறந்த முறையில் அனுசரிக்கப்படுகிறது.  இப்போது நமது அகில இந்திய BSNL  ஓய்வூதியர் நல அமைப்பு தோன்றிய வரலாற்றைச் சொல்லி இந்த நாளில் நம் பங்கு எப்படி இருந்து என்பதை சொல்கிறேன்.
முதலில் கடலூரில் 2007 ஜூலை மாதம்  தமிழ் நாடு BSNL  ஓய்வூதியர் நல அமைப்பு புள்ளிவிவர மாமன்னன் திரு.D.G அவர்களை தலைவராகவும் செயல்வீரர் திரு.V. ராமராவ் அவர்களை செயலராகவும் கொண்டு உருவாக்கப்பட்டது.
அப்போதே எக்ஸ்ட்ரா இன்கிரிமென்டுக்கு ஓய்வூதிய பணப்பலன் பெற்ற முதல் ஆள் நான்.  20.8.2009 அன்று பன்மொழி வித்தகர் திரு..முத்தியாலு அவர்களை தலைவராகவும் ஓய்வூதியர்களின் நலனுக்கு சிம்ம கர்ஜனையிடும் திரு. PSR (பிஎஸ்.ராமன்குட்டி) அவர்களை பொதுச் செயலாரகவும்  ஓய்வரியா உழைப்பாளி திரு.சித்துசிங் அவர்களை துணைப்பொதுச் செயலாளராகவும் கொண்டு சென்னையில் நமது அகில இந்தியசங்கம் உருவானது. 2007க்கு முன்னால் ஓய்வு பெற்றோருக்கு பென்சன் ரிவிஷன் ஓய்வூதியர்களுக்கு மெடிகல் அலவன்ஸ் 78.2 விழுக்காடு ரிவிஷன்  என்று பெற்றுத்தந்தோம். 78.2% பெற, மறைந்த  முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு அனந்தகுமார். அவர்களின் பங்களிப்பு மறக்க முடியாதது. அமைச்சரை சந்தித்து திரும்பி வரும்போது முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு G.நடராஜன் திரு.DG செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து அவர்கள் இருவர் வீட்டிலும் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் புகுந்து ஒருவாரம் சென்னைக்கு வர முடியாமல் பெங்களூருவிலேயே தங்கி சிரமப்பட்டார்கள. இப்போது நாம் அடைந்த பென்சன் அனாமலி வெற்றி யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். DOT உத்தரவிலேயே இது AIBSNLPWA. Vs UOI என்று உத்தரவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறை படுத்த திரு.  DG அவர்கள் தமிழ் மாநிலச் செயலர்  திரு. ஆர்வீ அவர்கள் பணி பாராட்டும் நன்றியையும் பெருகிறது. திரு.DG அவர்களின் வீட்டை கடும் மழையினால் வெள்ளம் சூழ்ந்தபோதும் தமிழ் மாநிலத்திலுள்ள 500 அனாமலி ஓய்வூதியர்களின் சங்க வித்தியாச மில்லாமல் தொகுத்து அனுப்பியுள்ளார். ஓய்வூதியர் தினத்தை இந்த மூன்று சுடர் விளக்குகளையம் அவர்களோடு இணைந்து செயல்பட்ட மூன்று தூண்டுகோல்களையும் வணங்கிப் பாராட்டுவோமாக. அன்று திரு.D.S.நகாரா திரு.சத்தியேந்திரபால் நேற்று ஓம்பிரகாஷ் குப்தா, வள்ளிநாயகம் இன்று DG, ராமராவ்..  நன்றி.
இந்த ஓய்வூதியர் தினத்தை கோவை SSA வில் கூட்டம் போட மத்திய மாநில தலைவர்கள் பேச்சாளர்கள் இந்த மாதமும் அடுத்த மாதமும் தேதி கிடைக்காததால் நாம் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் கான்பிரன்ஸ் சிறப்பான முறையில் கொண்டாட அனைவரும் உதவி கரமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இந்த ஓய்வூதியர் தினத்தில் அனைவருக்கும் வணக்கங்களையும்  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  
ஆர். திருவேங்கடசாமி.
செயலாளர்
அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல அமைப்பு
கோவை SSA .



 


No comments:

Post a Comment