மத்தியசங்கம் பென்ஷன் Anamoly வழக்கை டெல்லி Principal CAT ல் விடாது முயற்சித்ததின் விளைவாக BSNL துவக்கியதற்கு, பிறகு முதல் 9 மாதத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் ஐ revise செய்ய வேண்டும் என்று 16.12.2016 ல் தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து இலாக்கா டெல்லி உ யர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால் அதை உ யர் நீதி மன்றம் தள்ளு படி செய்தது.
எனவே நாம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை தொடர்தோம். நவம்பர் 2020ல் 16.12.2016 ல் அளித்த தீர்ப்பை அமுல் படுத்துமாறு அறிவுறுத்தியது. பென்ஷன் இலாகாவும் CAT தீர்ப்பை DOT அமுல் படுத்தி நீதி மன்ற அவமதிப்பை தவிர்க்க அறிவுறுத்தியது. இதற்கு பிறகும் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் ஒரு நீதி மன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்ததின் விளைவாக வேறு வழி இன்றி உத்திரவு இட இலாக்கா முன் வந்து உள்ளது. நமது மத்திய சங்கமும் 26.08.2021 அன்று இலாக்கா செயலாளருக்கு (DOT) கடிதம் எழுதியுள்ளது.
இம் மாததிற்குள் உத்திரவு வெளிவரும் என்று தெரிகிறது.கோவை மாவட்டத்தில் இதில் பயன் பெறுவோர் அடங்கிய விவரங்கள் இத்துடன் கொடுக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர்கள் சம்பந்தபட்ட ஓய்வுதியர்களை அல்லது அவர்களது குடும்ப ஓய்வூதியர்களை சந்தித்து இது குறித்து விளக்க வேண்டும்.
மாநில செயலாளர்
No comments:
Post a Comment