Thursday, 23 September 2021


 தோழர்களே ,

 சாம்பன் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுகின்றவர்களில்  235  ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் இன்று ( 23-09-2021) வரை CCA அலுவலகத்திற்கு வரவில்லை. தடையின்றி ஓய்வூதியம் பெற உடனடியாக உயிர்வாழ் சான்றிதழை அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெயர் பட்டியலைப் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 

Sunday, 5 September 2021

 

அருமை தோழர்களே ,
30.08.2021  தேதி தமிழ் மாநிலத்தின் மாநில செயற்குழு காணொளி மெய் நிகர் சந்திப்பு தோழர் V. ராமாராவ் தலைமையில் நடைபெற்றது. செயற்குழுவில் மத்திய சங்கத்தின் பொருளாளர் தோழர் T.S. விட்டோபன்  துவக்கி வைத்தார்அவர் துவக்க உரை மிகச் சிறப்பாக இருந்தது, பின்பு மாநிலச் செயலாளர் ஆர். வி வரவேற்புரை நல்கினார். ஏறக்குறைய எல்லா மாவட்ட செயலாளர்களும் மாநில பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். சிறப்பாக தோழர் A. சுகுமாரன் தோழர் K. முத்தியாலு மற்றும் தோழர் DG கலந்து கெண்டது  சிறப்புக்குரியது. 2 மாவட்ட செயலாளர்களும் சில மாநில பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள இயலவில்லை. கோவையின் சார்பாக  தோழர் RT மற்றும் அருணாசலம் கலந்து கொண்டனர். தோழர் விட்டோபன் தன் துவக்க உரையில் பென்சன்  ரிவிசன் என்பது எப்படி நியாயமானது என்றும் பெருவாரியான தோழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கிலே நாம் சந்திக்க எடுத்த தீர்ப்பு சிறப்பானது என்று விளக்கினார் பொதுவாக பொருளாளர் அனைவரும் கோட்டா சம்பந்தமாக பேசும் நிலையில் நம்முடைய தோழர்  விட்டோபன் சம்பளத்தை பற்றியும் பல்வேறு வழக்குகள் பற்றியும்  பென்ஷன் ரிவிஷன் வழக்கு  அனாமலி போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தார்
அதற்குப்பின் மாவட்ட  செயலாளர்கள் பேசினர். இடையிடையே மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கடலூர் நீலகிரி கோவை விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து பிரச்சனைகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் பேசினர் .அருணாசலம் பேசும்போது மெடிக்கல் அலவன்ஸ் பெறுவதற்கான காலக் கெடு முடிந்துவிட்டது ஆப்ஷன் ஃபார்ம் ஒட்டுமொத்தமாக தயாரித்து மொத்த தொகையை  மாநிலத்துக்கு அனுப்பக்கூடிய நிலையில் உள்ளது .நமக்கு வரவேண்டிய மெடிக்கல் அலவன்ஸ் இன்னும் இரண்டு தவணைகள் வரவேண்டும் எதிர்காலத்தில் பணம் கிடைத்து மாநிலச் சங்கம் மாவட்டத்திற்கு அனுப்பும்போது அதன் பயன்பாடு லிஸ்ட்  மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற  முடிவை நாம் எடுக்க வேண்டும்என்று சொன்னார் .அதேபோல மாவட்டந்தோறும் பிரச்சனையை மாவட்ட தலைமைக்கு தெரிவித்த பிறகே மாநிலத்திற்கு தெரிவிக்க வேண்டும் அதே போன்று கோவையில் (Nodal) நோடல் ஆபீசர் இல்லாதது மிகப்பெரிய குறை.  மாநில முழுமைக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நோடல் ஆபீசர் மாநிலச் நியமிக்க வேண்டும் என்பது மாநில நிர்வாகத்தின் உத்தரவு நாம் கறாராக கேட்டுப் பெற வேண்டும் 
 பல்வேறு பிரச்சினைகளை நோடல்  ஆபீசர் மூலம் பேசுவது மூலமாக பிரச்சினைகள் தீர வாய்ப்புள்ளது. கோவையின் உறுப்பினர் எண்ணிக்கை 1300 இன்னும் கோட்டா சுமார் 45 பேருக்கு அனுப்ப வேண்டும். கோவையின் பிரச்சினைகளை.  RT அவர்கள் பேசுகிறபோது மாநில  செயலாளரிடம் கோவை நிர்வாகம் பேட்டி கொடுப்பதில் சுணக்கம் காட்டுகிறது  என்றும் மாவட்ட சங்கத்தை மதிக்காத போக்கு மிகுந்து இருப்பதுமன வருத்தத்தை தருகிறது என்றும் சொன்னார்.
மற்ற மாவட்டங்கள்  கொடுத்த பல்வேறு பிரச்சனைகளை தொகுத்து இறுதியில் மாநிலச் செயலாளர்  ஆர்வி தொகுத்து வழங்கினார் .மிக அருமையான தொகுப்பு . தான் பேசும்போது பல தோழர்கள் தங்களுடைய பிரச்சனைக்கு டாக்குமெண்ட் அனுப்பாமல் வாட்ஸ் அப்பில் அனுப்புவதால் அந்த பதிவுகளை கம்ப்யூட்டரில் தானே எடுக்க வேண்டிய நிலைமை இருப்பதைச் சொன்னார் விருதுநகர் திருச்சி போன்ற பிரச்சினைகளை நாசுக்காக தொட்டுக் காட்டின கோவையில் கொடுத்துள்ள மூன்று பிரச்சினைகள் இந்த காலத்தில் தீரும் என்று  எதிர்பார்ப்பதாக கூறினார். நீலகிரி மெர்சி பிரச்சனை மீண்டும் பீல்ட் ரிப்போர்ட்டில் சில மாற்றங்கள் வேண்டும் என்று எடுத்துரைத்தார். வரக்கூடிய மாநில அதாலத் கூட்டத்தில் பிக்ஸட் மெடிகல் அலவன்ஸ்   பற்றியும் CGHS தகவல் பற்றியும் பேச இருப்பதாகவும் அது முடிவுக்கு வருவதாகவும் தெரிவித்தார் பிக்ஸட் மெடிகல் அலவன்ஸ் ஆப்ஷன் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தோழர்களே இந்த கடுமையான காலத்தில் கூட நம்முடைய மாநில சங்கம் பல்வேறு பிரச்சினையை எடுத்துச் சொல்லி உள்ளது. நம்முடைய தோழர் லிங்க்அண்ணன் நாயக். அவர்களுடைய பிரச்சனை கடுமையான மூன்று ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது அவருக்கு DCRG அரியர்ஸ் பட்டுவாடா சுமார் 85 ஆயிரம் செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இவ்வளவு சிறப்பாக அனைத்து மாவட்ட மாநில சார்பில் மாநில பொறுப்பாளர்கள் பேசிய பிறகு, A. சுகுமாரன் அவர்கள் CGHS பற்றி மிக நீண்ட விளக்கத்தையும் சந்தேகத்தையும் தீர்த்து வைத்து பேசினார். அருமை தோழர் K. முத்தியாலு மாவட்டம்தோறும் எத்தனை உறுப்பினர்கள் இன்னும்  உறுப்பினர்கள் ஆக சேராமல் இருக்கிறார்கள் என்ற தகவலை எடுத்துச்சொல்லி முயன்றால் இன்னும் பலரை சங்கத்திற்கு கொண்டுவரலாம் என்று தெரிவித்தார். அதேபோல் அகில இந்திய மட்டத்தில் இன்னும் நமக்கு வாய்ப்புகள் உள்ளது இதுவரை  VRSல் போனவர்களில் 20 ஆயிரம் பேரை மட்டுமே சேர்த்துள்ளோம் இன்னும் நிறைய பேர் உள்ளனர் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சொன்னார் அதற்குப் பிறகு DG அவர்களின்  தொடர்  உரை சிறப்பாக இருந்தது  அவர் பேசும்போது DOT உயர் அதிகாரி CCA போன்ற வர்களுடன். தொடர்பு கொள்ள வேண்டும் பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும் அது மிக அவசியம் என்று சொன்னார் இப்போது நடப்பதை பார்த்தால் அதாலத் கூட்டம் ஒரு கண் துடைப்பாக இருக்கிறது அதை மாற்றி பயனுள்ளதாக ஆக வேண்டும் . ஒரிசா போல தமிழக அதாலத் சிறந்த முறையில் நடத்த நாம் முயல வேண்டும் .பல பிரச்சனைகளை அவர் சுட்டி காட்டி தன்னுடைய வீடியோ உரையில் கொடுத்ததை அனைவரும் கேட்க வேண்டும் என்று பல மாநில பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர். புதிய தகவலாக 80 வயது நெருங்கி உடனேயே 90 வயது நெருங்கி உடனேயே அதற்குண்டான பென்ஷன் . உயர்வு இருக்கும் என்று தெரிவித்தார். நம்முடைய பென்ஷன் தாரர்களின் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் வாரிசுதாரர்கள் நாம் மனு கொடுக்க வேண்டும் .அவ்வாறு தமிழகத்தில் பலரை மாநிலச் சங்கம் pensioner ke அனுமதி பெற்றுள்ளதுசிறப்பானது
காலை 11 மணிக்கு துவங்கிய காணொளி செயற்குழு மதியம் ஐந்தரை மணி அளவில் நன்றியுரையுடன் முடிவு பெற்றது இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மீண்டுமொரு  CEC முடிந்தால், நேரடியாகவே நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த செயற்குழுவில் கலந்துகொண்டு அனைத்து   மாவட்டங்கள் உடைய பிரச்சனையை ஆர்வி தொகுத்துச் சொன்னதும் அனைவருக்கும் மன நிம்மதி தந்தது தன்னுடைய உரையில் தீர்வு கண்ட பல  ஃபேமிலி  பென்ஷனர் கள் பற்றிஆர்வி நினைவு கூர்ந்தார் அதேபோன்று  ACS  திரு S .சுந்தரகிருஷ்ணன்,  மாநிலச் செயலாளர் உடன் சேர்ந்து பணியாற்றியது சிறப்பு  பொருளாளர் இன் உரையின் தமிழகத்தில் 16 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் என்றும் அகில இந்திய அளவில் 64 ஆயிரம் பேர் என்றும் எடுத்துரைத்தார். பல இடங்களில் சர்வீஸ் சங்கத்தின் எண்ணிக்கையைவிட நம்முடைய   சங்கத்தின் எண்ணிக்கை அதிகம். சர்வீசில் உள்ளபோது ஏற்பட்ட பிரச்சினைகளை பல அவர்கள் நமது சங்கத்தில் உறுப்பினரான பின்  தீர்த்தது மிக சிறப்பு.
இந்த சங்கத்தை கட்டிக் காப்பதும் மேலும் மேலும் மெழுகு சேர்ப்பதும் காலத்தினுடைய கட்டாயம். இதைப் பற்றிய அறிக்கை மாநிலச் சங்கம் விரைவில் வெளியிடும்.
 நன்றியுடன்
அருணாச்சலம்
மாநில உதவி செயலாளர்