Friday, 20 August 2021

 

வணக்கம்.

12ஆம் ஆண்டு அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல அமைப்பு நிறைவு விழா நமது மாநில சங்கம் கொண்டாடுவதில் கோவை மாவட்ட சங்கம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த அமைப்பு ஆரம்பித்தபோது கோவை SSA விலிருந்து  தோழர்.K. சிதம்பரம் நான் (R.T) தோழர் வாமனன் (white and white) தோழர். மாகாளியப்பன் மற்றும் தோழர்  K.L. ராகவன் ஆகியோர் கலந்து கொண்டோம்

20.8.2009..அன்று தொடங்கிய இந்த ஆரம்ப விழாவில் நாடெங்கிலும் இருந்து 450 தோழர்கள் கலந்து கொண்டனர்./ அழைப்பிதழ் மற்றும் கலந்துகொண்டோர் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது/  அகில இந்திய துணைத்தலைவர் தோழர் D.G அவர்களின் அறிவுறுத்தலின்படி 12.9.2010 அன்று அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மாண்புமிகு .ராசா அவர்களிடம் நான் தோழர். சிதம்பரம் தோழர் விஸ்வநாதன் தோழர் சுப்ரமணிய ம் ஆகியோர் pre.2007 பென்சன் மாற்றம் வேண்டி மகஜர் அளித்தோம்

 உடனடியாக முடித்துத்தருவதாக உறுதி அளித்தார். /புகைப்படமும் செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது/.

6.9.2011 அன்று BSNLMRS Without voucher நிர்வாகம் நிறுத்தியபோது கோவையில் நடைபெற்ற அகில இந்திய NFTE செயற்குழு கூட்டத்தில் CMD அவர்களைச் சந்தித்து ஓய்வூதியர்களுக்காவது அந்த சலுகை வேண்டும் என்று மகஜர் கொடுத்தோம்.

இப்போது அகில இந்திய சங்கத்தின் தொடர்முயற்சியால் வெற்றியும் பெற்றோம்.  78.2% இதற்காக நமது அகில இந்திய சங்கம் எடுத்த முயற்சிகள் மத்திய அமைச்சர் மாண்புமிகு அனந்தகுமார் அவர்களின் பேருதவியால் கிடைக்கப்பெற்றோம். /புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது./

நம் வெற்றிக்காக வித்திட்ட தலைவர்கள் தோழர்கள். இராமன்குட்டி சித்துசிங் தோழர் D.G. தோழர் G.நடராஜன் தோழர். P.கங்காதரராவ் தோழர் K.முத்தியாலு தோழர்.செங்கப்பா கர்நாடகா  தோழர் V.ராமராவ் தோழர் T.S.விட்டோபன் /அஞ்சலகத்தில் என்னுடன் ரேடியோ லைசன்ஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்தவர்/. ஆகிய அனைவருக்கும் நன்றி. ‌

கோவையில் 5வது மாநில மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. அதை நடத்திட நமக்கு மிக உதவியாக இருந்த  நிதி உதவி D.G. அவர்கள் சிபாரிசின்படி அளித்த மாநில சங்கத்திற்கும் குறைந்த வாடகையில் இடம் அளித்த ஐயப்பன் பூஜா சங்க நிர்வாகிகளுக்கும் மாநில மாநாடு மிகச்சிறப்பாக அமைய உதவிட்ட தலைவர் குருசாமி தோழர்கள் C.பழனிச்சாமி சிவக்குமாரன் வாமனன் அருணாச்சலம் ஜகதீஸ்வரன் பாலசுப்ரமணியன் தோழியர் சிவகாமசுந்தரி உதயகுமார் சற்குணம் அம்புரோஸ் /இன்னும் பெயர் விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும் / அனைவருக்கும் நன்றி. நிதி உதவி செய்திட்ட உறுப்பினர்களுக்கும் விளம்பரதாரர்கள்  அனைவருக்கும் நன்றி.  கேரள வெள்ளத்தின் போதும் கொரோனா காலத்திலும் பெருமளவில் நிதி உதவி செய்திட்ட தோழியர். சிவகாமசுந்தரிக்கும் நிதி அளித்திட்ட மற்றையோருக்கும்  நன்றி.

இப்போது நம் கோவை மாவட்டம் 1300 உறுப்பினர்களை கடந்து விட்டது. இதற்கு ஆரம்பமுதல் இன்றுவரை உறுதுணையாக இருந்த அத்தனை தோழர்களுக்கும் நன்றி. இப்போது தோழர் அருணாச்சலம் அவர்களும் ஜகதீசன் மற்றும் எந்த பதவியிலும் இல்லாத ஆயுள் உறுப்பினர்கள் தோழர்கள் ராபர்ட் உமேஷ் மற்றும் தோழர் சுப்ரமணியன் ஆகியோரின் இடையறா உழைப்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி .

R. திருவேங்கட சாமி
செயலாளர்.
AIBSNLPWA
கோவை SSA.
2019

No comments:

Post a Comment