Sunday, 22 August 2021

 

அருமை தோழர்களே!
அனைவருக்கும்  வணக்கம்.
நம் உறுப்பினர் அனைவரும் மெடிக்கல் Card  கையெழுத்தும் மெடிக்கல் Card Validity Date Extend  செய்திருப்பிர்கள் என நம்புகிறேன்.  இந்த செப்டம்பர் இறுதி வரை நமது விருப்பத்தை  செலுத்தலாம். அதேபோல இம்மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட IDA,  ஆகஸ்ட் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து சுமார் 10.5./. வழங்கப்படும். ஜூலைக்கு பிறகு வந்த 3.1% ஒரு மாத நிலுவை உடன் அடுத்த மாதம் கிடைக்கப் பெறலாம்.
தோழர்களே வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் காணொளி மூலமாக மெய் நிகர் பென்சன் அதாலத் நடைபெற இருக்கிறது. அதேபோன்று இம்மாத இறுதியில் (31-08-2021) மெய் நிகர்  மாநில செயற்குழுகூட்டம் காணொளி வாயிலாக நடைபெறப் போகிறது .அதற்கு நீண்டகாலமாக தேங்கியிருந்த நான்கு பிரச்சினைகள் மீண்டும் எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளோம் . மாநில செயற்குழுவில் நமது மாவட்ட உறுப்பினர் எண்ணிக்கை நிலவரம் கோவையின் தனிப்பட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன. நம்முடைய சங்கம் இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு உத்தரவுகளை பெற்றுள்ளது.  அவைகளை அவ்வப்போது மாநிலசங்கம்  நமது மாவட்ட சங்கம்  பதிவு செய்து வருகிறது.
தோழர்களே இந்த கொரோனா காலத்தில் நாம் ஒன்று சேர்ந்து  கூட்டம் நடத்த முடியாத நிலை தொடர்கிறது. வருடத்தில் மூன்று விழாக்களை சிறப்பாக நடத்தும் நாம்
v மகளிர் தினம்,
v  ஓய்வூதியர் தினம், 
v நம்முடைய சங்க அமைப்பு தினம்
ஆகியவைகளை பெருவாரியான ஓய்வூதியர்  உறுப்பினர்களுடன் பல வருடங்கள் நடத்தியுள்ளேரம்ஆனால் இப்போது நம்மால் நடத்த இயலவில்லை. ஊழியர்களை நேரடியாக சந்திக்கவும் முடியவில்லை .பலருக்கு பென்ஷன் பெறுவதில் ஃபேமிலி பென்ஷன் பெறுவதில் கால தாமதம் ஏற்படுகிறதுஇல்லை என்றால் ஃபேமிலி பென்ஷன் வருவது மிக மிக கடினம் . இது நம்முடைய மறைந்த DGM மணியன் அவர்களுடைய விஷயத்தில் நாம் சந்தித்த நிலைபாடு. இப்போதுதான் நம் அருமை  (மறைந்த) தோழர் ராமகிருஷ்ணன் அவருடைய பென்ஷன் பேப்பர் DOT க்கு அனுப்பப்பட்டுள்ளது . நம்முடைய தோழர்கள் உடைய பென்ஷன் மாற்றம் பென்ஷன் பெறுவது சம்பந்தமான கடிதங்கள் DOT க்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக இது சம்பந்தமாக நம் உறுப்பினர்கள் தகுந்த ஆதாரங்களை கொடுத்தால் நம் சங்கம் முன்கை எடுத்துச் செயல்படும் .
தோழர்களே நம்முடைய தோழர்கள் தொலைபேசி மூலமாக அல்லது காணொளி மூலமாக தங்களுடைய பிரச்சனைகளையும் பென்ஷன் நிலுவை பற்றியும் அவ்வப்போது மாவட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும். பிரச்சினைகளைத் தொகுத்து மாவட்ட அளவில் பேசி, இல்லாவிடில் மத்திய சங்கத்திற்கும் மாநிலச் சங்கத்திற்கு நாம் பிரச்சனைகளை எடுத்துச் செல்லலாம் .
சுமார் எழுபத்தி ஆறு ஃபேமிலி பென்ஷன் பிரச்சினைகள் நமது மாநிலச் சங்கத்தின் முலமாக தீர்க்கப்பட்டுள்ளது. வாராவாரம்   மாநில சங்கம்  நம்முடைய அருமை தோழர் R.V மற்றும் தோழர் சுந்தர கிருஷ்ணன் விடாமல் பிரச்சனைகளை எடுத்துச் சென்று தீர்வு காண்கின்றனர்.  இதில் மகிழ்ச்சியான செய்தி நம்முடைய தோழர் லிங்க நாயக்கனுடைய பிரச்சனை 2000க்கு முன்னால்  இருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. அவருடைய சர்வீஸ் புக் தேடி எடுப்பதில் தாமதம் பிரச்சினைக்கு தேவையான டாக்குமெண்ட் பெறுவதில் தாமதம் மாவட்ட சங்கம் எச்சரிக்கை எடுத்ததுசமீபத்தில் மீண்டும் கையெழுத்து வாங்கி அனுப்பினோம். ஆச்சரியம் என்னவெனில் இரண்டு நாட்களில் அந்த பிரச்சனைக்கு திர்வு காணப்பட்டு அவருக்கு டிசி அரியர்ஸ் 40 ஆயிரத்துக்கு மேல் பட்டுவாடா ஆகி உள்ளது. மேலும் சில பணப்பயன் வரவேண்டும். இதை இந்த மாதத்திற்குள் தீர்ப்பதாக புதிதாக பொறுப்பு எடுத்துள்ள Dy.CCA Smt கௌதமி அவர்கள் தொலைபேசி வாயிலாக நம்முடைய   மாவட்ட செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.  இது மிகுந்த மகிழ்ச்சியான ஒன்று .எனவே இந்த பிரச்சினையைநாம் தாண்டியுள்ளேரம்.
ü 1300 பேர் கோவையில் உறுப்பினர்களாகவும்
ü 15,000 மாநில சங்கத்தில் உறுப்பினர்களாகவும்
ü 62000 ஆயுள் உறுப்பினர்கள் + 35000 ஆண்டு சந்தா செலுத்தும் அகில இந்திய அளவில் உறுப்பினர் களாகவும் உள்ளோம்.   
நாம் அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட தனிப்பெரும் சங்கமாக  விளங்குகிறோம். தோழர்களே இது அனைத்தும் நம் அனைவருடைய கூட்டு செயல்பாடு. சார்ந்திருக்கிற யூனியன் பற்றி  பெருமையாக பேசுவதும் அதை வளர்த்தெடுப்பதில் கவனமாக இருப்பதும் ஒவ்வொரு ஓய்வூதியரின் கடமையாகும்.  நம் முன்னால் முக்கியமான  விஷயம்
Ø ஓய்வூதிய மாற்றம் ,
Ø ஓய்வூதிய முரண்பாடு ( Pension Anomaly ) ,
Ø மற்றும் 01-07-2007 முதல் நாம் பெறவேண்டிய 78.2 சத நிலுவைத்தொகை
போன்ற   பிரச்சினைகள் நாம் வென்றாக  வேண்டும். இது வழக்கு ரீதியாகவோ அல்லது கூட்டு பேர சக்தியின் மூலமாகவோ பெற வேண்டியது நம்முடைய பொறுப்பு.  இதில் மத்திய சங்கம் சரியாக நிலை நிலையெடுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்பிக்கையுடன் காத்திருப்போம் !
இப்படிக்கு
கோவை அருணாச்சலம்
மாநில உதவி செயலாளர்.