District President R.ROBERTS Mob 94428 42880 District Secretary: R. JEGADEESWARAN Mob: 94869 77488 District Treasurer : S. KOTTIAPPAN Mob : 94861 05152 Web e-mail: kovaidivn@gmail.com Web Master : N.MOHAN 80560 66995
Friday, 31 December 2021
Friday, 24 December 2021
Friday, 17 December 2021
வணக்கம்.
17.12.1982 இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஓய்வூதியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மத்திய மாநில ஓய்வூதியர் களால் மிகச் சிறந்த முறையில் அனுசரிக்கப்படுகிறது. இப்போது நமது அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல அமைப்பு தோன்றிய வரலாற்றைச் சொல்லி இந்த நாளில் நம் பங்கு எப்படி இருந்து என்பதை சொல்கிறேன்.
முதலில் கடலூரில் 2007 ஜூலை மாதம் தமிழ் நாடு BSNL ஓய்வூதியர் நல அமைப்பு புள்ளிவிவர மாமன்னன் திரு.D.G அவர்களை தலைவராகவும் செயல்வீரர் திரு.V. ராமராவ் அவர்களை செயலராகவும் கொண்டு உருவாக்கப்பட்டது.
அப்போதே எக்ஸ்ட்ரா இன்கிரிமென்டுக்கு ஓய்வூதிய பணப்பலன் பெற்ற முதல் ஆள் நான். 20.8.2009 அன்று பன்மொழி வித்தகர் திரு.க.முத்தியாலு அவர்களை தலைவராகவும் ஓய்வூதியர்களின் நலனுக்கு சிம்ம கர்ஜனையிடும் திரு. PSR (பிஎஸ்.ராமன்குட்டி) அவர்களை பொதுச் செயலாரகவும் ஓய்வரியா உழைப்பாளி திரு.சித்துசிங் அவர்களை துணைப்பொதுச் செயலாளராகவும் கொண்டு சென்னையில் நமது அகில இந்தியசங்கம் உருவானது. 2007க்கு முன்னால் ஓய்வு பெற்றோருக்கு பென்சன் ரிவிஷன் ஓய்வூதியர்களுக்கு மெடிகல் அலவன்ஸ் 78.2 விழுக்காடு ரிவிஷன் என்று பெற்றுத்தந்தோம். 78.2% பெற, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு அனந்தகுமார். அவர்களின் பங்களிப்பு மறக்க முடியாதது. அமைச்சரை சந்தித்து திரும்பி வரும்போது முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு G.நடராஜன் திரு.DG செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து அவர்கள் இருவர் வீட்டிலும் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் புகுந்து ஒருவாரம் சென்னைக்கு வர முடியாமல் பெங்களூருவிலேயே தங்கி சிரமப்பட்டார்கள. இப்போது நாம் அடைந்த பென்சன் அனாமலி வெற்றி யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். DOT உத்தரவிலேயே இது AIBSNLPWA. Vs UOI என்று உத்தரவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறை படுத்த திரு. DG அவர்கள் தமிழ் மாநிலச் செயலர் திரு. ஆர்வீ அவர்கள் பணி பாராட்டும் நன்றியையும் பெருகிறது. திரு.DG அவர்களின் வீட்டை கடும் மழையினால் வெள்ளம் சூழ்ந்தபோதும் தமிழ் மாநிலத்திலுள்ள 500 அனாமலி ஓய்வூதியர்களின் சங்க வித்தியாச மில்லாமல் தொகுத்து அனுப்பியுள்ளார். ஓய்வூதியர் தினத்தை இந்த மூன்று சுடர் விளக்குகளையம் அவர்களோடு இணைந்து செயல்பட்ட மூன்று தூண்டுகோல்களையும் வணங்கிப் பாராட்டுவோமாக. அன்று திரு.D.S.நகாரா திரு.சத்தியேந்திரபால் நேற்று ஓம்பிரகாஷ் குப்தா, வள்ளிநாயகம் இன்று DG, ராமராவ்.. நன்றி.
இந்த ஓய்வூதியர் தினத்தை கோவை SSA வில் கூட்டம் போட மத்திய மாநில தலைவர்கள் பேச்சாளர்கள் இந்த மாதமும் அடுத்த மாதமும் தேதி கிடைக்காததால் நாம் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் கான்பிரன்ஸ் சிறப்பான முறையில் கொண்டாட அனைவரும் உதவி கரமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இந்த ஓய்வூதியர் தினத்தில் அனைவருக்கும் வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர். திருவேங்கடசாமி.
செயலாளர்
அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல அமைப்பு
கோவை SSA .
Wednesday, 8 December 2021
Saturday, 4 December 2021
அருமை தோழர்களே தோழியர்களே
வணக்கம்
டிசம்பர் 1ஆம் தேதி நம்முடைய மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் குருசாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது 45 தோழர்கள் கலந்து கொண்டனர் 18 பேர் மாவட்ட சங்க நிர்வாகிகள். மறைந்த தோழர்களுக்கு அஞ்சலிக்கு பிறகு செயற் குழுவுக்கான அஜெண்டா ஒருமனதாக ஏற்கப்பட்டது
தலைமை உரையில் தலைவர் நம்முடைய சங்கத்தின் சிறப்பு பற்றியும் நம்முடைய செயல்பாடு பற்றியும் எடுத்துச் சொன்னார். நம்முடைய மாவட்ட செயலாளர் தோழர் ஆர் டி அவர்கள் துவக்க உரையாக வரவேற்பும் நீண்ட உரை ஆற்றினார். Pension anomaly கோவை பகுதிக்கு 32 பேருக்கு வரப்பட்டதாகவும் அதில் 15 பேர்களுடைய ஆர்டர் வந்ததாக தகவல் சொன்னார். குறிப்பாக பொள்ளாச்சி தண்டபாணி, பொள்ளாச்சி வேதாம்பாள், திருப்பூர் அரவிந்த், ஆக்சன் மூத்த தோழர் சத்தியசீலன், ராமநாதபுரம் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்களுக்கான ஆர்டர் பட்டுவாடா வங்கி கணக்கில் நிலுவைத் தொகை கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னார் இந்த வழக்கை AIBSNLPWA VS DOT என்று குறிப்பிட்டு தீர்ப்பளித்துள்ளது. மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நம்முடைய மூத்த தோழர்கள் அந்த தீர்ப்பை பெற்றது சிறப்பு . அதேபோன்று இந்த கொரோனா காலத்தில் அதாலத்தில் பேசப்பட்ட தோழியர் ருக்மணி & தோழர் லிங்க நாயக் போன்றவர்களுடைய கடுமையான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் நிலுவையாக பெற்றனர். இதில் Com. RT DOT கணக்கை சரிபார்த்து அதில் மாற்றத்தைக் கொண்டு வந்து சரியாக கணித்த பெருமை RT யை சாரும் .
இது தவிர தோழர் ராமகிருஷ்ணன் பென்சன் ஆகட்டும் சுமார் 15 ஓய்வூதியர்கள் குடும்ப பென்ஷன் நம்முடைய மாவட்டம் சரி செய்துள்ளது இதில் பெரும் பங்கு தோழர் ஜெகதீசனை சாரும் மாநிலச் செயலாளர் தோழர் RV உடைய பங்கு சிறப்புக்குரியது கோவை பகுதிக்கு நோடல் ஆபீசர் நியமிக்க வேண்டும் அது குறித்து நிர்வாகத்திற்கு கடிதம் கொடுப்பது என்றும் அவர்கள் நம்முடன் விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் செயற்குழு நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்க வேண்டும் என்று செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது மெடிக்கல் Card Renewal கடினமான சூழ்நிலையிலும் நாம் செய்து கொடுத்துள்ளேரம்r நமது தோழர்கள் உடைய குடியிருப்பு டெபாசிட் தொகை பலருக்கு வரவில்லை இதனை பேசி பெற்றுத் தரவேண்டும் என்று மாவட்ட சங்கம் முயற்சி எடுத்தது
அவர்களுடைய டெபாசிட் தொகை கோவையில் சுமார் 10 பென்ஷனர் களுக்கு வர வேண்டியுள்ளது இதை சரியான முறையில் கையாண்டு சர்வீஸ் யூனியனுடன் சேர்ந்து உதவியுடன் திருப்பூர் வெள்ளிங்கிரி போன்றவர்களுடைய நிலுவைத் தொகையை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம்
மேலும் இந்த காலகட்டத்தில் நம்முடைய தோழர் ஜெகதீஸ்வரன் மற்றும் அருணாச்சலம் மற்றும் மோகன் போன்றவர்கள் ஃபேமிலி பென்ஷன் பிரச்சனையை சரியான முறையில் கையாண்டு, அதன் மூலம் சுமார் 15 பேர்களுக்கு ஃபேமிலி பென்ஷன் பெற்றுக் கொடுத்துள்ளோம் லைஃப் சர்டிஃபிகேட் சரியான முறையில் சேர்க்காததால் பென்ஷன் நின்று போனவர்களுக்கு நாம் மாநிலச் சங்க உதவியுடன் பேசி அவர்கள் தொடர்ந்து பென்ஷன் பெற உதவி செய்து உள்ளோம் நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட சங்கத்தின் சார்பில் லைஃப்
சர்டிஃபிகேட் கொடுப்பதற்கான உபகரணத்தை நாம் நம்முடைய சங்க வளாகத்தில் நிறுவி உள்ளோம் அதேபோன்று income tax பார்ம் 16 கிடைக்கப் பெறாத சூழ்நிலையை அகில இந்திய சங்கத்திற்கு கொண்டு சென்று இன்று புதிய வடிவில் டி form 16ல் போடப்பட்டு நம்முடைய தோழர்கள் அதை டவுன்லோட் செய்து tax return செய்வதற்கு வசதி செய்து உள்ளோம்.
மேலும் தோழர்களே நம்முடைய மறைந்த தோழர் நடராஜன் தோழர் சண்முகம் தோழர் ராமகிருஷ்ணன் தோழர் செம்மல் அமுதம் இன்னும் பலருக்கு ஃபேமிலி பென்ஷன் விரைவில் பெற்றுத் தந்தது சிறப்பானது நம்முடைய திருப்பூர் தோழர் அரவிந்தனுக்கு நிலுவைத் தொகையை கணக்கிட்டு கொடுத்ததோடு சரி பார்த்தும் கொடுத்துள்ளோம் இந்த pension anomaly order mushroom மற்றும் தகவல்கள் கொடுத்தால் உரிய முறையில் அவர்களுடைய டாக்ஸ் குறைப்பதற்கான வழியை மாவட்ட சங்கம் செய்து கொடுக்கும் இதில் உதவி தேவைப்பட்டால் தோழர் ஜெகதீஸ்வரன் தோழர் மோகன் அவர்களை அணுகலாம் நம்முடைய மாவட்டச் செயலாளர்Com RT ஆகியவர்களும் துணைபுரிவார்
செயற்குழுவில் தோழர் புலவர் திருக்கோட்டியப்பன் தோழர் சங்கிலியன் குன்னூர் செயலர் துரை போன்றவர்கள் பேசினார்கள் குன்னூர் பகுதியில் 140 தோழர்கள் சங்கத்தில் சேர்ந்து உள்ளதாகவும் பென்ஷன் அனாமலி நிதியாக இருபத்தி ஒரு ஆயிரம் ரூபாய் வசூலாகி உள்ளதாகவும் விரைவில் மாவட்ட மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். Coonoor Ootyஉடைய நிர்வாகம் கோவை பகுதிக்கு சேர்க்கப்பட்டுள்ளது ஊழியர் பிரச்சினையை நாம் துணை நின்று தீர்த்து வருவதை சுட்டிக்காட்டினார் மேலும் குன்னூர் வளர்ச்சிக்கு நமது பங்கை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்
மாநில துணைத் தலைவர் சிபி அவர்கள் தனிப்பட்ட முறையில் தான் தீர்த்த பிரச்சினைகளையும் மாவட்டபிரச்சனைகளை இணைந்து வேண்டியபோது நிர்வாகத்தை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் நம்முடைய மாவட்ட பொருளாளர் திரு ஜெகதீசன் அவர்கள் நிதி நிலையை சுட்டிக்காட்டினார் கையிருப்பில் உள்ள பணம் கோட்டா அனுப்பிய பிறகு சுமார் இரண்டு இலட்சம் இருக்கும் என்பதை தெரிவித்தார் அதேபோன்று ஃபிக்ஸட் டெபாசிட்டில் நாலரை லட்சம் போடப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்
தோழர்களே நம் மாநில மாநாடு சேலத்திலும், அகில இந்திய மாநாடு விசாகப்பட்டினத்திலும் நடைபெற உள்ளது கோவை மாவட்ட மாநாடு சிறப்பாக நடத்த வேண்டும் 1306 உறுப்பினர்களைக் கொண்டு தமிழகத்தில் நாம் மிகப்பெரிய சங்கமாக உருவாக்கியுள்ளோம் CGHS இல் அனைவரையும் சேர்ப்பது தேங்கியுள்ள ஒரு இரண்டு பிரச்சினைகளை மேல்மட்டத்தில் பேசி தீர்த்து வைப்பது ஃபேமிலி பென்ஷன் வராத பென்ஷனர் அவருடைய பிரச்சனையை கையில் எடுப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட செயற்குழு அனைவரையும் பணித்தது. புதிதாக 6 உறுப்பினர்கள் நமது சங்கத்தில் சேர்ந்துள்ளனர் ஐந்து உறுப்பினர்கள் பொள்ளாச்சியில் ஒரு உறுப்பினர் உடுமலைப்பேட்டையில் சேர்ந்துள்ளனர்அவர்களுடைய பெயர் மாநில மட்டத்திற்கு அனுப்பியுள்ளோம். இந்த சாதனைகள் எல்லாம் செயல்படுத்த நம் அனைத்து உறுப்பினர்கள் முன்னணித் தோழர்கள் நிர்வாகிகள் போன்றவர்களே காரணம் நம் பக்கத்து மாவட்டங்களான சேலம், தர்மபுரி, ஈரோடு, பாலக்காடு, நீலகிரி போன்றவற்றோடு சேர்ந்து பயணித்து CGHS wellness சென்டரை கொண்டுவர நாம் முயற்சி எடுக்க வேண்டும். ஒரு நான்கைந்து தோழர்கள் ஒரு பதினைந்து நாள் சேர்ந்து பணியாற்றினால் தான் CGHS ல் நாம் இணைய முடியும் அதற்கு செலுத்தப்படும் பணத்தை நாம் BSNL இருந்து பெற்றுவிட முடியும் என்று மாநிலச் சங்கம்தகவல் கொடுத்துள்ளனர். எனிவே இதனை காரியசித்தி ஆக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
நன்றியுடன்
B. அருணாச்சலம்
Subscribe to:
Posts (Atom)