Friday 18 December 2020

 

அருமை தோழர்களே!
 வணக்கம்.
மாநில நிர்வாகம் மெடிக்கல் பில் மற்றும் மெடிக்கல் அலவன்ஸ் தொகையை வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளனர் கடந்த 2019 ஆம் ஆண்டு மூன்றாவது மாதம் வரை உள்ள மெடிக்கல் பில்ஸ் அனைத்தும் கணக்கில் போடப்பட்டுள்ளது அதேபோல மெடிக்கல் அலவன்ஸ் 2018- 2019 ஆண்டிற்கான 12 மாத அலவன்ஸ் ரூபாய் 12000/- ரூபாய் கணக்கில் போடப்பட்டுள்ளது கோவையில் சுமார் 68 பென்ஷன் தாரர்களுக்கு மெடிக்கல் அலவன்ஸ் வந்துள்ளது மீதம் உள்ள பென்ஷன் தாரர்களுக்கு நிதி தீர்ந்தபடியால் வருகிற  நிதியில் பட்டுவாடா ஆகும் என மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
நமது தோழர்கள் அலவன்ஸ் வந்ததா மெடிக்கல் பில் கிடைக்கப்பெற்றதா என்பதை வங்கிக் கணக்கில் சரிபார்த்து தகவல் கொடுக்கவும் மாநில நிர்வாகம் நம்மிடம் வரும் நிதியில் 2019- 2020 ஆண்டுக்கான முழு அலவன்ஸ் போடப்படும என்று உறுதி கூறியுள்ளனர் . தோழர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு நம்முடைய சங்கத்தின்  முயற்சியால் மெடிக்கல் பில் வித்தவுட் வவுச்சர் ஹாஸ்பிடல் பில் போன்றவையும் மெடிக்கல் அலவன்ஸ்-ம் கிடைக்கப் பெற்றோம் இது ஒரு முன்னேற்றமே தோழர்கள் அனைவருக்கும்
               17 டிசம்பர் பென்ஷனர்  தின வாழ்த்துகள்
இந்த கொரானா காலத்தல் நம்மால் கூட்டம் நடத்த முடியவில்லை . அதேபோல CGHS வசதியை கோவைக்கு நாம் கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்.  அதாலத்தில் தங்கியிருந்த பழைய பிரச்சனைகள் அனைத்திற்கும் கோவை கோட்டத்தில் பேசி உரிய கடிதத்தை DOTக்கு அனுப்பி உள்ளோம் பிரச்சனைகள் விரைவில் தீருமென நம்புகிறோம் இம்மாதம் மீண்டும் ஒரு பென்சன் அதாலத் நடைபெற உள்ளது தோழர்கள் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் அதனுடைய விவரத்தை நமக்கு அளித்தால் மாநிலச் சங்கம் மூலமாக அதற்கு விவாதிக்க ஏதுவாக இருக்கும்
வாழ்த்துக்களுடன்
பி அருணாச்சலம் .
மாநில உதவிச் செயலாளர் .
Com.B.Arunachalam attends Google meet conducted by TN Circle on 17-12-2020.



No comments:

Post a Comment