Wednesday, 25 November 2020

தோழர்களே,
Pension Adalat நடத்த வேண்டும் என்று DOT கடந்த 14.10.2020 ல் உத்தரவிட்டதை அடுத்து நேற்றைய தினம் (24.11.2020) Online மூலமாக நடைபெற்றது.
மாநில சங்கத்தின் சார்பில் 47 பிரச்சினைகள் கொடுத்ததில் 19க்கு உத்திரவிட்டதாக தெரிவிக்கபட்டது. மற்றவற்றிற்கு சொல்லப்பட்ட பதில்கள் திருப்திகரமாக   இல்லை. குறிப்பாக Jt. CCA திரு தக்ஷிணாமூர்த்தி அவர்களின் அணுகுமுறையும், அவர் எடுத்து சொன்ன விதமும் ஒரு வருடத்திற்கு பிறகு நடக்கும் adalat திற்கு மிகவும் எதிர்பார்ப்போடு சென்ற நமக்கு ஏமாற்றத்தையே தந்தது.
பொதுவாக தலையிட்டு விளக்கம் கொடுக்கும் CCA அவர்கள் இம்முறை அமைதியாகவே இருந்தார். மேலும் கூட்டத்தில் பங்கேற்க அனுப்பிய Link குறித்து விவரமாக விளக்கப்படாத காரணத்தால் தோழர்கள் DG, V.ராமராவ், K.முத்தியாலு கலந்து கொள்வதில் சிரமம் இருந்தது. மிகுந்த முயற்சிக்கு பிறகு DG, V.ராமராவ் பங்கேற்றனர்.
தோழர்கள்  A.சுகுமாரன், STR Division செயலர்  S.சுந்தரகிருஷ்ணன், கோவை மாவட்டம்  B.அருணாச்சலம் ACS ஆகியோர்  கலந்து கொண்டனர்.
இனி வரும் adalat களில் Jt. CCA அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நம்புவோம்.
மாநில செயலாளர்

No comments:

Post a Comment