Friday, 15 May 2020


ஓய்வூதியர்கள் குறை தீர்க்க
கட்டணமில்லா இலவச 
கால் சென்டர் 
சேவை.
தோழர்களே ,
1.  ஓய்வூதியர்கள் தங்களுக்கு குறை ஏதேனும் இருப்பின் ,  " ஓய்வூதிய குறையினை நிவர்த்தி செய்யவும் , மற்றும் கண்காணிக்கவும் ஒரு மைய்யப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு "  ஒன்று உள்ளது இது  ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாகாவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது                ( CPENGRAMS ) இதில் ஓய்வூதியர்கள் தங்கள்  குறைகளை முறையிடலாம்.   இது தவிர ஓய்வூதியர்கள் தபால் மூலமாகவும் , -மெயில் மூலமாகவும் தங்கள் குறைகளை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாக்காவிற்கு தெரியப்படுத்தலாம் .அவ்வாறு பெறப்பட்ட குறைகள் உடனடியாக CPENGRAMS  அமைப்பிற்கு  பதிவேற்றம் செய்யப்பட்டு , குறை பதிவேற்று எண் மற்ற விபரங்கள் புகார் அளித்தவருக்கு தெரிவிக்கப்படும் .மேலும் அந்த குறையினை   சம்பந்தப்பட்ட  அமைச்சகம் /இலாக்கா/நிறுவன த்திற்கு அந்த குறைகளை களைவதற்காக அனுப்பப்படுகிறது.

2.  ஆனால்  மிக அதிக வயதுள்ள முதியவர்கள் , குடும்ப ஓய்வூதியதாரர்கள் , புதிய தொழில் நுட்பம் அறியாத ஓய்வூதியர்களால் , தங்கள் ஓய்வூதிய குறைபாடுகளை CPENGRAMS  அமைப்புக்கு தெரிவிக்க முடிவதில்லை என்பதை  சமீப காலங்களில் உணரப்பட்டுள்ளது. ஆகவே அப்படிப்பட்ட வயது முதிர்ந்த ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்களுக்கும் உதவ வேண்டிய தேவை எழுந்துள்ளது .  அதன்பிரகாரம்  ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாகாவானது கட்டணமில்லா தொலைபேசி கால் சென்டர் சேவை ஒன்றை துவக்கியுள்ளது. அதன் அழைப்பு எண் 1800 11 1960 ஆகும். இது கட்டணமில்லா இலவச சேவையாகும். எனவே ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதியக் குறைகளை அனைத்து வேலை நாட்களிலும், அலுவலக பணி நடைபெறும் நேரங்களில் தெரிவிக்கலாம்.  இந்த கட்டணமில்லா தொலைபேசி இலவச கால் சென்டர் எண் 1800 11 1960 மற்றும் அது அளிக்கும் சேவைகளை நன்கு பிரபலப்படுத்துமாறு அனைத்து ஓய்வூதியர் சங்கங்கள்  கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 
இணை செயலாளர் ,
இந்திய அரசு
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாகா
லோக் நாயக் பவன் , புது டில்லி .
தமிழாக்கம்  
N.MOHAN
WEBMASTER


No comments:

Post a Comment