கோவையில் தோழர் DG
அவர்களின் சிறப்புரை அமைப்பு தினம் (திரு DG அகில இந்திய துணை தலைவர்
சிறப்புரை)
கோவை கிளை 1000 என்ற இலக்குக்கு மிக அருகில்.
இதற்கு உறுதுணை புரிந்த சங்க நிர்வாகிகளை பாராட்டினார்.
2009 ல் சங்கம் அமைக்கும் போது நடந்த நிகழ்வுகளை
விவரித்தார்.கட்சி,சங்க,கேடர் பேதமில்லாமல் இன்று
73000 உறுப்பினர்கள் (43000 ஆயுள் ,30000 ஆண்டு உறுப்பினர்கள்)
பிரேசில் நாட்டில் ஒரு மசோதா மூலம் வழங்கப்படும் பென்ஸன்
பற்றிய சில விதிகள் மாற்றிட முயன்றார்கள்.
25 வருடம் பென்ஸன் காண்ட்ரிப்யூட்டின் இருந்தால்
மட்டும் முழு பென்ஸன் . குடும்ப ஓய்வூதியம் குறைப்பு. 70க்கு மேல் மட்டும் பென்ஸன் . கூட்டனி ஆட்சி 60 % உறுப்பினர் ஆதரவு கிடைக்க வில்லை. 2018 தேர்தல் காரணமாய் மசோதா கைவிடபட்டது. பென்ஸன் சங்கங்கள் போராட்டம் வெற்றி பெற்றது.
நிகரகுவா நாடும் பென்ஸன் மாற்றம் கொண்டு வர முயன் ரது.
சங்கங்கள் போராடி வென்றது.
ரஷ்யாவில் சில மாற்றம்
கொண்டு வர முயன்றது.
ஐரோப்பிய யூனியனில் பென்ஸன் இனி தனியார் கைவசம் .
தொழிலாளர் சட்டங்கள் இப்போது பெரியளவில் மாறிவிட்டது.
எனவே வாங்கும் பென்ஷனை தொடர்ந்து காத்திட சங்கம்
ஒற்றுமைதேவை .
பென்ஸன் ரிவிஷன் இந்தியாவில் இன்றைய நிலை.
2013 ல் 7 வது சம்பளக் குழு அறிவித்த போது.நமது பென்ஸன் மாற்றம் 7 வது குழுவின் பரிந்துரை யின் படி அமல்
படுத்திட கோரிக்கை வைத்தோம் .
ஓரல் ஏவிடென்ஸ் நமது செயலர் கங்காதரராவ் கொடுக்கும் போது
கமிஷன் தலைவர் இது மிக சரியாண கோரிக்கைஎன்றார் .2014ல் கமிஷன் டெலிகாம்
இலக்காவிற்கு அனுப்பிய இது பற்றிய கடிதம் 8 மாதம் ஆகிய பிறகு 2015 ல் DOT பதில்
அனுப்பியது.
இது பற்றிய முடிவு டி ஓ பி ஆர் தான் எடுக்க வேண்டும் .
என்றுப தில் தந்து.
8 மாத இடைவெளியில் பே கமிஷன் பரித்துறைகள் அரசக்கு கொடுத்து
விட்டது.
இதன் பிறகு பல வகை போராட்டம் நடத்திய பிறகும் நமது கோரிக்கை
நிறை வேறாசூழல் .
இதன் பின்னர் பிற சங்கங்களுடன் சேர்ந்து ஒரு கூட்டு குழு
அமைக்கப்பட்டது.
தோழர் நமபுதிரி இடம் தோழர் பக்ஷி பேசி பார்த்தும் பலன்
இல்லை.திரு நடராஜன் தோழர் மிஸ்திரி இடம் பேசியும் பலன் இல்லை. தோழர் பாசுவும் நமது கூட்டத்திற்கு வர வில்லை. நமது கூட்டு குழுவில் இப்போதுப 8 சங்கங்கள் .
தேர்தல் முடிந்ததும் இப்போது அந்த
பென்ஷன் மாற்றம் கோரிக்கை நிறைவேற திரு ஜோஷி அவர்கள் உதவியுடன் முயற்சிகள்
இப்போது .
டெல்லியில் கடந்த மாதம் இரண்டு முறை அவர்களை சந்தித்தோம். டெலிகாம் இணை அமைச்சரை அவர் உதவியுடன் சந்தித்தோம். அவர் மனித வள மேம்பாட்டு அமைச்சர். இந்த உயர்வு மூலம் ஒருவருக்கு ரூ
100 க்கு 115 கிடைக்கும் என்று சொன்னோம்.
2ந்தேதி திரு ரவி சங்கர் பிரசாத் அவர்களை சந்திக்கவும்
ஏற்பாடு செய்தார்.
அன்றே மாலை 0600 சாஸ்திரி பவனில் 6 பேர் சந்தித்தோம்.
என்ன பிரச்சனை என் வினவினார்.BSNL நிலையினை
சீராக்கிய பிறகுதான் உங்க கோரிக்கையினை நிறை வேற்ற முடியும்.
அவரிடம் நம் பிரச்னை விளக்கம் தந்தோம். பென்ஸன் மாற்றம் ...அரசுக்கு செலவு ...பயன் படுவோர் பற்றிய
தகவல் தந்தோம் .
அவர் வினவிய வினாவுக்கு.பணியில் இருக்கும் பணியாளர் சங்கம்
பென்ஸன் ரிவிஷன்க்கும் பே ரிவிஷன்க்கும் தொடர்பு வேண்டாம் என்ற கோரிக்கை வைத்துள்ளார்கள்
என்ற தகவல் தந்தோம் .
அமைச்சர் ஆவன செய்வதாய் சொன்னர்.
இதில் உள்ள சிக்கல் ...டி லிங்க் பென்ஸன் மற்றும் சம்பள
மாற்றம்...அலுவலகங்கிடையே நடந்த கடிதங்கள் பரி மாற்றம் பற்றிய விபரம் தந்தார்.
பென்ஸன் இலாகா மற்றும் டெலிகாம் இலாகா.
0%,5%,10%,15%,7 CPC ...இந்த 5 சிபாரிசுக்ள் அனுப்பபட்டு அவர்களின் முடிவு படி பென்ஸன்
மாற்றம் வரும்.
இதன் பிறகு இன்றைக்கு நாம் கொடுத்துள்ள புதிய திட்டம்.
நமது கோரிக்கை நிர்ந்திரவதீர்வு மாற்று வழி தான் இப்போது. இதன் படி ..
IDA பென்ஸனை CDA பென்ஸனாக மாற்றும் திட்டம் .1.1.2016முதல்
212.2÷225....94.4
100 ரூ IDA பென்ஸன் என்றால்ரூ 94.40 அதற்கு இணையான CDA பென்ஸன் .இதனை 7 வது குழு பரிந்துரை படி 2.57 .. ஆல்
பெருக்கினால் வருவது 1.1.2016 புதிய ரிவிசைடு பேசிக் பென்ஸன்.
இதன் பின் 0 % DA .அதன் பின் 6 மாதம் ஒருமுறை மத்திய அரசு DA .படி ....
இந்த புதிய கணக்கீடு முறையின் அடிப்படையில் கண க்கிட்டால்,
தோழர் சுகுமாரன் தோழர் ராமாராவ் தோழர் DG
இவர்கள்க்கு கிடைக்கும் கூடுதல் பற்றிய தகவல் தந்தார்.*(
இந்த புதிய முறையில் ஒரு உதாதரணமாய் தந்தார்... Executive
...Non Executive )
உத்தேசமாக ரூ3000+ முதல் 6000 + வரை கூடுதல் கிடைக்கும்.
1.10.2000,1.1.2006 ..இவர்களுக்கும் .2016 க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள்.கணக்கீடு பற்றியும் விளக்கம் தந்தார்
இதற்கெல்லாம் தனித்தனியாக கணக்கு போட்டு அதன் விளக்கம் தந்தார்.
இவர்களுக்கு 1.1.2016 ல் பென்ஸன் கண்கிடப்பட்டு. வழங்கும் முறை
விளக்கம் தந்தார்.
பென்ஸன் இலாகா இந்த திட்டம் சரி என்று இருந்தாலும்.
டெலிகாம் இலாகாசொல்வதே நடைபெறும். முதலில் டி லிங்க் பண்ண வேண்டும், இதன் பிறகு பல தடைகள் தாண்ட வேண்டும் . இதற்கு எதிராய் சில ஓய்வூதியர் சங்கங்கள் செயல் பட்டு உள்ளது..
மீதமுள்ள 3 சங்கங்களுக்கும் கடிதம்(மின் அஞ்சல்) அனுப்பியுள்ளோம்
அதற்கு 15 % பிட்மெண்ட் உடன் பென்ஸன் கோரிக்கை உடன் ...PRC பரிந்துரை படி 6.7.2019 ல் டெலிகாம் அமைச்சர்க்கு திரு மிஸ்த்ரி
எழுதிய கடிதம் பற்றி விளக்கினார்.
நமது சங்கம் அரசியல் சார்பு இல்லை என்பதை கூறி அவர்
எழுதிய கடிதத்தில் உள்ள சில விமர்சனங்களை
பற்றி விவரித்தார். இந்த சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் சிந்திக்க
வேண்டும்.என்றார்.
விரைவில் BSNL லிருந்து ஒரு லட்ஷம் பணியாளர்கள்
ஓய்வு பெறும் சூழல் நிலவுகிறது. 37 a ல் துணை விதியில்(10) சில மாற்றம் செய்ய
வேண்டியுள்ளது.
நமது புதிய திட்டம் பெருவாரியாக உள்ள ஓய்வூ தியர்கள் ஆதரவு
தெரிவித்து உள்ளனர்.
இந்த திட்டம் வெற்றி பெற முயற்சிகள் தொடர்கிறது
நம்முடைய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான முறையில்.
முன்பு நமது கோரிக்கை நிறை வேறியது போல் இதனையும் நிறைவேற்ற
முயலுவோம்.
நமது சங்கம் மாவட்ட அளவில். உறுப்பினர் பிரச்சனை களை
தீர்க்கும் முறை தொடர்ந்திட வாழ்த்தினார் .
வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள பாதிப்புகளை மக்களின் துயர் துடைத்திட
தாரளமாய் நிதி உதவிட வேண்டினார்...
அனைவருக்கும் நன்றி நவில சிறப்புக் கூட்டம் இனிதே
முடிந்தது.
No comments:
Post a Comment