Thursday, 3 January 2019


தோழர் PSR  விடுத்துள்ள செய்தி
தோழர் ராமன் குட்டி அவர்களுக்கு கேரள மாநில ஜாயிண்ட் CCA  அனுப்பியுள்ள ஆங்கில கடிதத்தின் தமிழாக்கம் 
சார் ,
இப்போது ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியர்கள் SAMPANN  குறித்த பல்வேறு வினாக்களை கேட்டு வருகிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியினை உங்கள் தோழர்களிடம் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன் 
SAMPANN எனும் நேரடியாகவே ஓய்வூதியம் CCA அலுவலகத்திலிருந்து  வங்கிகள் மூலமாக வழங்கும் திட்டம் புதிதாக ஒய்வு பெரும் ஓய்வூதியர்களுக்கு மட்டும் உடனடியாக செயல்படுத்தப்படுகிறது. அதற்கான வலைதளத்தில் யாரும் ரிஜிஸ்டர் செய்ய முடியாது . லாகின் மற்றும் .யூசர் பாஸ்வேர்ட் ஆகியவை CCA  அலுவலகம் மூலமாக ஓய்வூதியம் பெறும்போது ஆட்டோமேட்டிக் ஆக உருவாக்கப்படும். அவை SMS மற்றும் இ -மெயில் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். இனிமேல் ஓய்வுபெறும் நபர்களுக்கு DCRG /கம்முடேஷன் பெறுகின்ற சமயத்தில் அவர்களுக்கான லாகின் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவை தெரிவிக்கப்படும் 
தற்சமயம் வங்கி /தபால் நிலையம் மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும் தொலைத்தொடர்பு ஓய்வூதியர்கள் SAMPANN  சிஸ்டத்திற்கு மாறும்போது யூசர் ID மற்றும் பாஸ்வேர்ட் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு தெரிவிக்கப்படும். இவைகள் செய்து முடிக்க  சிறிது காலம் ஆகும் .அதற்கான உரிய உத்தரவுகள் வெளியாகும் .

No comments:

Post a Comment