Tuesday 30 October 2018

மாவட்ட செயலரின் கடிதம் 
அன்புத் தோழர்களே ,
அனைவருக்கும் வணக்கம். கோவை மாவட்டத்தில் நாளொரு வண்ணம் உறுப்பினர் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே இருக்கும் மிகப்பெரிய ஓய்வூதியர் சங்கமாம் AIBSNLPWA சார்பாக ஒரு சிறிய இடைவேளைக்குப்பின் மீண்டும் உங்களுடன் கலந்து பேசுவதில் பேருவகை கொள்கிறேன். 
29 கோவை உறுப்பினர்களுடன் பூரி மாநாட்டிற்கு சென்று வந்த பின் உங்களை சந்திக்கிறேன். அகில இந்திய மாநாட்டில் 2007 முதல் 78.2% நிலுவைத்தொகை பெறவேண்டும் என்ற கோரிக்கையும், pension anomaly , கூடுதல் ஒரு இன்க்ரிமெண்ட் கேஸ் , உறுப்பினர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அடைய பாடுபடுவது போன்ற மிகப்பெரிய கடமைகளை செய்வதற்கான வரை படத்தினை வரைந்துஒப்புதல் பெற்றது.
தலைவர் பதவியில் தோழர் P.S ராமன் குட்டி தொடர , பொதுசசெயலாளராக பெங்களூரை சேர்ந்த தோழர் கங்காதர ராவ் அவர்களும் , பொருளாளராக தோழர் T.S. விட்டோபன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட, அருமைத் தோழர் கே.முத்தியாலு துணைப்பொது செயலாளராக தேர்வு செய்யப்பட மாநாட்டினை வெகு சிறப்பாக நடத்தி காட்டினோம்.. சிறப்பான உபசரிப்பு, அருமையான தங்கும் அறைகள் , பூரி ஜெகந்நாதரின் மஹா நைவேத்ய பிரசாதத்துடன் மாநாடு நிறைவு பெற்றது.
தோழர்களே நம் கோவை மாவட்ட சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 875 ஐ தாண்டி வீறு நடை போட்டு வருவது உங்கள் அனைவரின் ஒத்துழைப்பால்தான் . 700 உறுப்பினர்களின் KYP படிவம் பூர்த்தி செய்து பெறப்பட்டு , நிர்வாகத்திடம் சமர்ப்பித்து ஒப்புகை பெறப்பட்டுள்ளது. அந்த பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சென்ற வாரம் DOT க்கும் அனுப்பப்பட்டு விட்டது.
தோழர்களே வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி , நவம்பர் மாதம் பிறந்துள்ள உறுப்பினர்களின் வாழ்த்துக்கூட்டம் நடை பெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறும்., அதுபோழ்து 22-11-18ல் நடத்தப்பட்ட உள்ள உண்ணா நோன்பு போராட்டம், டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி மாவட்ட மாநாடு நடத்துவது குறித்த இறுதி முடிவுகள் செய்யப்படும். மாவட்ட சங்கத்தின் சார்பாக இம்மாதம் நிர்வாகத்துடன் " குறை தீர்க்கும் நாள் " கூட்டம் நடத்தப்பட்டது.Nodal Officer CAO , DE Admn, AO Admn , SDE Admn  அகியோருடன் அதாளத்தில் தேங்கியுள்ள பிரச்சினைகள், மற்றும் நம் மாவட்டம் சார்ந்த பிரச்சினைகள் எடுக்கப்பட்டு அந்தந்த மட்டத்திற்கு பதில்கள் பெறப்பட்டன. விரைவில் அனைத்து பிரச்சினைகளையும் களைய உறுதி பெறப்பட்டது. FP பெறுவது பிரச்சினைகள் 2, பென்ஷன் fixation  3 உறுப்பினர்களை பற்றியது. மெடிக்கல் அலவன்ஸ் நிலுவையில் உள்ளவர்கள் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டது. தோழர்களே சுமார் 70 பேர்களின் மருத்துவ அலவன்ஸ் 2016 வரையிலான நிலுவை , 4 தவணைகள் போடப்பட்டு தமிழ்நாடு மாநில அலுவலகம் சென்னை அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் STR, STP  பகுதிகளுக்கும் பண பற்றாக்குறை காரணாமாக போடப்படாமல் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இப்பிரச்சினை தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CDA -IDA Conversion , முத்த ஓய்வூதியர்கள் Pension Fixation இன்னமும் DOT யிலிருந்து வரவில்லை. மாநில சங்கத்திற்கு தெரிவித்துள்ளோம்.May 2018ல் ஒய்வு பெற்றவர்களின் PPO புத்தகம் பலருக்கு இன்னமும் வரவில்லை, சரியான தகவலும் இல்லை. மாநில செயலர் தோழர் RV அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். தோழர் பஞ்சவர்ணம் போன்றவர்களின் PPO புத்தகம் விரைவில் கிடைக்கப்பெறுவோம். VRS  கொடுத்து நிலுவையில் உள்ளவர்களின் PPO புத்தகம் இம்மாதம்  CPPC  க்கு அனுப்பப்படும் .
தோழர்களே கோவை AO  அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை  , ஒவ்வொரு வங்கியிலும் CPPC  பகுதியில் ஆள்  பற்றாக்குறை, DOT பகுதியில் கடுமையான வேலை பளு, ஆள்  பற்றாக்குறை. அ .இ .பொதுசசெயலாளர் பணியிடங்ககளை நிரப்ப Corporate மற்றும் DOT  பகுதிகளுக்கு கடிதங்கள் எழுதியுள்ளார். இது ஒரு நல்ல முயற்சி. 22 நவம்பர் நடைபெற உள்ள உண்ணா நோன்பு போராட்டம் Pension  அனாமலி , One increment கேஸ் ,78.2% நிலுவை, நமக்கும் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது போன்றவைகள் விரைவில் முடிவடையும் என்பது தெளிவான ஒன்று. இவைகளைப்பெற நமது முயற்சியும், ஒருமித்த கோரிக்கையும் , MTNL சங்கங்கள் ஆதரவு அளிப்பதைப்போல் மற்ற சங்கங்களும் கோரிக்கையின் பால் ஒன்று சேர்ந்து பாடுபட்டால் பெறுவது எளிது.
பூரி மாநாட்டில் அனைத்திந்திய அறைகூவலை நிறைவேற்றுவோம். நம்முடைய உறுதியான  நிலைப்பாட்டினை சங்கம் சார்ந்த , எந்த சங்கமும் சாராத ஓய்வூதியர்களிடம் எடுத்துச்செல்வோம். அவர்களை நம் உறுப்பினர்களாக சேர்ப்போம். கோவை மாநாட்டைப்பற்றியும் , நவம்பர் 22 உண்ணா விரதம் குறித்தும் , தேங்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும் கடிதம் வாயிலாக தொடர்பு கொள்கிறேன். கோவை மாவட்ட மாநாட்டின் சிறப்பமசமாக அனைத்திந்திய துணைத்தலைவர் தோழர் A சுகுமாரன் ,அனைத்திந்திய பொதுசசெயலாளர் தோழர் கங்காதர ராவ் , அனைத்திந்திய துணை பொது செயலாளர்  தோழர் K.முத்தியாலு , தமிழ்மாநில  செயலர் தோழர் RV , மற்றும் நம் வளை தள மாஸ்டர் தோழர் N .மோகன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.நிதியாலும் , உடல் உழைப்பாலும், எண்ணிக்கையாலும் சங்க மேன்மையை உயர்த்த , மேம்படுத்த இந்த மாநாட்டில் உறுதி புரிவோம்.
பூரி மாநாட்டின் அறைகூவலான "Each One Carry Two" எனும் கோரிக்கையை நிறைவேற்றுவோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் 
B .அருணாச்சலம் ,
மாவட்ட செயலர்,
AIBSNLPWA 
கோவை மாவட்டம் 






















No comments:

Post a Comment