வருந்துகிறோம்.
கோவை மாவட்ட AIBSNLPWA செயலர் தோழர் அருணாசலம் அவர்களின் மூத்த சகோதரர் திரு. பாலசுப்ரமணியன் ( வயது 72 ) அவர்கள் 6-6-18 அன்று கோவையில் தமது இல்லத்தில் அகால மரணமடைந்தார் எனும் செய்தியை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கும், தோழர் அருணாசலத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மறைந்த திரு . பாலசுப்ரமணியன் அவர்கள் TNEB எஞ்சினியர்கள் சங்கத்தில் மிக முக்கிய பொறுப்பு வகித்து வந்தார். அவர் மனைவி திருமதி சந்திரா பாலசுப்ரமணியன் அவர்கள் BSNL-ல் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். நம் சங்கத்தின் கோவை மாவட்ட கிளையின் ஆயுட்கால உறுப்பினர்.
தோழர் அருணாசலம்தான் நீத்தோருக்கான கடமைகளை செய்துகொண்டு இருக்கிறார். மீண்டும் நம் சங்க செயல்பாடுகளை
19-6-18 செவ்வாய் முதல் தொடருவார்.
மறைந்த திரு . பாலசுப்ரமணியன் அவர்கள் ஆன்மா சாந்தியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment