அருமைத் தோழர்களே / தோழியர்களே ,
அனைவருக்கும் தோழமை வணக்கம்.
தமிழ் மாநில சங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் ஆதார் xerox -ல் உங்கள் PPO எண் , உங்கள் கைப்பேசி எண் ,PAN எண் ஆகியவற்றை தெளிவாக எழுதி self attested என கீழே எழுதி கையொப்பமிட்ட copy யை மாவட்ட சங்க அலுவலகத்தில் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சென்னையில் உள்ள STR மாவட்ட கிளை அதன் உறுப்பினர்கள் அத்துணை பேர்களின் விவரங்களை DOT cell க்கு கொடுத்து விட்டார்கள்.நாமும் அவ்வாறே மிக விரைவாக கொடுக்க வேண்டும்.இதுவரை நம் மாவட்டத்தில் சுமார் 150 தோழர்கள் மேற்கூறியுள்ள விவரங்களை மாவட்ட சங்கத்திடம் கொடுத்துள்ளார்கள். மற்ற தோழர்களும் விரைவில் அளிக்கும்படியாக கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
2000க்கு முன்பாக ஒய்வு பெற்ற DOT ஓய்வூதியதாரர்களுக்கு அவர்கள் பெற்றுவந்த கடைசி மாத சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்பட உள்ளது.அதற்கான விண்ணப்ப படிவம் BSNL அலுவலகத்தில், AO அலுவலகத்தில் மற்றும் நம் சங்க அலுவலகத்திலும் உள்ளது. அதனைப்பெற்று பூர்த்தி செய்து அதற்ரிய நகல்களுடன் அலுவலகத்தில் வழங்கிட வேண்டுகிறேன்.ஓய்வூதிய அடிப்படை ஊதியத்தை குறிக்க கடைசி பத்து மாத சம்பள சராசரி க்குப்பதிலாக ( LPD )கடைசி மாத சம்பளத்தை மட்டும் (Basic Pay ) எடுத்துக்கொள்வதால் , கணிசமான அளவிற்கு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். எனவே இந்த வேலையினை விரைவாக , மிக விரைவாக முடிக்க வேண்டுகிறேன்.
இதுவரை சுமார் 20--25 மூத்த DOT ஓய்வூதியர்கள் வீடுகளுக்கே சென்று விஷயத்தை எடுத்துக்கூறி ,உரிய படிவங்களை கொடுத்து பூர்த்தி செய்யச் செய்து .அவற்றை நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளோம்.இந்த அரிய கண் துஞ்சா , மெய்வலி பாரா சேவையை கோவை மாவட்டம் மட்டுமே செய்து வருகிறது என்பதை மகிழ்வுடன் உங்களுடன் பரிமாறிக்கொள்கிறேன். இவ்வரிய சேவையில் தம்மை என்னுடன் இணைத்துக்கொண்ட தோழர்கள் திருவேங்கடசாமி, சிவக்குமார் , ஜெகதீசன் , அன்புரோஸ் ஆகியவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .உதாரணத்திற்கு தோழியர் சுந்தரி என்ற Retired Trunk Monitor அவர்களுக்கு வயது 82, அவர் கணவருக்கு வயது 90.அவர்களின் 1001 சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ளோம். முதலில் நம் சங்கத்தின் மீது நம்பிக்கை வரச்செய்து, 2 , 3 நாட்கள் தொடர்ந்து அவர்கள் இல்லம் சென்று விவரங்களை எடுத்துக்கூறி அவர்களிடம் அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பெற்றதை இங்கே குறிப்பிடலாம்.
தோழர்களே இதைப்போல DOT ஓய்வூதியர்கள் சுமார் 100 பேர்களுக்கு மேல் இருக்கலாம். அவர்களையும் சென்று பார்த்து அல்லது தகவல் கொடுத்து வரச்செய்து இந்த காரியத்தை முடிக்க வேண்டும். அவர்கள் யாரும் நம் உறுப்பினர்கள் அல்ல.ஆனால் அதற்குப்பிறகு நம் ஆயுள்கால சந்தாதாரராக ஆகி நன்கொடையும் வழங்கியுள்ளார்கள் என்பது மனதிற்கு மகிழ்வினை அளிக்கிறது.
தோழர்களே 78.2 சத நிலுவை த்தொகையினை அநேகமாக எல்லோரும் பெற்று விட்டார்கள். ஒவ்வொருவரும் சுமார் 50,000/-, 60,000/- அதற்கு மேலும் பெற்றுள்ளது மகிழ்வினை அளிக்கிறது. நமக்குத்தெரிந்து சுமார் 20 தோழர்களுக்கு மட்டுமே நிலுவைத் தொகை கிட்ட வில்லை. தமிழகத்தைத் தாண்டி தங்கள் மத்திய அலுவலத்தைக் கொண்டுள்ள கனரா வாங்கி, பேங்க் ஆப் இந்தியா , சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ,கார்பொரேஷன் வங்கி ஆகிய வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த சிக்கல். அந்தந்த மத்திய அலுவலகங்களுக்கு தகவல்களை மற்றும் இ- மெயில்களை நாம் அனுப்பியுள்ளோம். விரைவில் சிக்கல் தீருமென்று நம்புகிறோம். இதைத்தவிர வேறு ஏதாவது பிரச்சினை காரணமாக நிலுவைத்தொகை பெறாத தோழர்கள் உரிய காரணங்களுடன் மாவட்ட சங்கத்தை அணுகலாம். சேவை புரிய காத்திருக்கிறோம். சென்னையில் இயங்கி வரும் DOT அலுவலகம் நம் மனதிற்கு ஏற்றவாறு உதவிகரமாக இல்லை.அங்குள்ள வேலைப்பளு, ஆள்கள் பற்றாக்குறை , மற்ற பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் நம் தமிழ மாநில சங்கம் நமக்கு மிகுந்த உதவிகள் புரிந்து வருகிறது.
தோழர்களே 78.2 சத நிலுவை பெற்றவர்களில் சுமார் 150 தோழர்கள் மட்டுமே நன்கொடை அளித்துள்ளனர். சுமார் 200 பேர்களுக்கு மேல் இன்னும் வழங்க வேண்டும். நமது செயற்குழு உறுப்பினர்கள் முயற்சி செய்து நன்கொடை அளிக்க ஊக்கப்படுத்த வேண்டும். பென்ஷன் அனாமலி , 01-01-2007 லிருந்து ஓய்வூதிய மாற்றம் 78.2 சத அடிப்படையில், மற்றும் ஓய்வூதிய மாற்றம் பெற கவனம் செலுத்த வேண்டும். கோர்ட்களில் தொடுத்துள்ள வழக்குகளை சந்திக்க பெருந்தொகை தேவைப்படுகிறது. இதனை உணர்ந்து நன்கொடைகளை அள்ளி வழங்க வேண்டுகிறோம்.
வரும் 12-10-2017 வியாழன் நம் மாவட்ட செயற்குழு நம் சங்க அலுவலகத்தில் கூட உள்ளது. இந்த மாதம் பிறந்தவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் , நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் , மெடிக்கல் அலவன்ஸ் போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
மீண்டும் சந்திப்போம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
B .அருணாசலம்
மாவட்ட செயலர்.

No comments:
Post a Comment