Thursday, 15 June 2017

ஓய்வூதியர்கள் உந்து சக்தி
AIBSNLPWA கோவை மாவட்ட ஓய்வூதியர்களின் சங்கம் , அதன் உறுப்பினர்களின் ஜூன் மாதம்  பிறந்தவர்களின் பிறந்தநாளை கனிவும் பாசமும் கலந்த உபசரிப்புடன் வரவேற்று தோழமையுடன் கொண்டாடியது.  
நிகழ்வு கோவை  CTO அலுவலகத்தின் முதல்மாடியில் உள்ள சங்க அலுவலகத்தில்  15-6-2017 அன்று காலை 11 மணிக்கு மிகசிறப்பாக  நடைபெற்றது. 
புலவர். திரு . கோவிந்தராஜ் அவர்கள் தலைமை வகிக்க பணி ஓய்வுபெற்ற பொதுமேளாளர் திரு. குருசாமி அவர்கள் முன்னிலை வகிக்க,  அனைவரையும்  மாவட்டசெயலர் திரு. அருணாசலம் அவர்கள் வரவேற்று உரையாற்றினார். நிகழ்வில் 24/81 ஓய்வுதியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
1943ல் பிறந்த தோழர் திரு. ஆறுமுகம் அவர்கள் கேக் வெட்டி நிகழ்வினைஆரம்பிக்க தொடர்ந்து ஜூனில் பிறந்தநாள் கண்ட ழோழர்,தோழியர்கள் கேக் வெட்டினர்.இந்நிகழ்வு அனைவருக்கும் மன நிறைவு அளித்தது. மாவட்டசெயலர் தோழர் அருணாசலம் அவர்கள் அகில இந்திய சங்கத்தின் செயல்பாடுகளை பற்றி விளக்கி கறினார். 78.2% DA நிலைகளை விளக்கியும், மருத்துவ அலவன்ஸ் நடைமுறை தன்மை பற்றியும் உரையாற்றினார்.
பிறந்தநாள் கண்ட அனைத்து தோழர்களுக்கும் நினைவு பரிசு வழங்கியது , சங்கம் உறுப்பினர் மேல்கொண்ட மனிதநேயத்தின் அக்கறையின்  வெளிப்பாடாகவே இருந்தது. நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் கேக்,மிக்ஸர்,தேநீர் வழங்கி திரு சிவகுமார் நன்றிநவில கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.அந்நிகழ்வின் ஒளி படங்கள்தான்  கீழே   உள்ள பதிவுகள்.
நன்றி:  தமிழில் தொகுத்தளித்த 
தோழர் மனோகரன்

Long Live Young Seniors

No comments:

Post a Comment