District President R.ROBERTS Mob 94428 42880 District Secretary: R. JEGADEESWARAN Mob: 94869 77488 District Treasurer : S. KOTTIAPPAN Mob : 94861 05152 Web e-mail: kovaidivn@gmail.com Web Master : N.MOHAN 80560 66995
Wednesday, 25 January 2023
Saturday, 14 January 2023
Friday, 13 January 2023
Sunday, 1 January 2023
அன்பு நண்பர்களே,
31-12-2022 இன்று மெயின் தொலைபேசி நிலையத்தில் கோவை Kovai CGHS
Beneficiaries அமைப்பின் கூட்டம் நடந்தது. அதில் ordnance factory, Income Tax
போன்ற மத்திய அரசு ஊழியர்களுடைய ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். நம்முடைய பகுதியில் இருந்து அருமை நண்பர் ஷாஜகான் PGM அவர்கள் கலந்து கொண்டார். கோவையில் CGHS சென்டர் ஜனவரி இரண்டாவது வாரம் துவங்கும் எனவும் அமைச்சரிடத்தில் தேதியை கேட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. ஒரு Governing Body தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
சென்னையிலிருந்து AD Staff வருகிறபோது அவரை சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கோவையில் உள்ள KMCH, குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரி, PSG போன்ற மருத்துவமனைகளை அணுகி நம்முடைய பேனலில் கொண்டு வர முயற்சி எடுப்பதற்காக மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது . அந்த கமிட்டி நம்முடைய கடிதத்தோடு சென்று அந்த மருத்துவ மனைகளை அணுகி முயற்சிகளை மேற்கொள்ளும். தோழர்களே வெல்னஸ் சென்டர் ஆரம்பிக்கப்பட்ட பிறகு கோவை மாவட்டத்தினுடைய பயன்பாட்டாளர்கள் பதிவு செய்யலாம் என்றும் அதற்காக ஒரு கூட்டத்தை ஏற்படுத்தலாம் என்றும் தலைவர் ஹரிஹரன் அவர்கள் தெரிவித்தார். கேரளாவில் இருந்து பலர் கோவை பகுதியில் சேர விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அதை முயற்சி செய்ய வேண்டும்.
அருணாச்சலம்.