பயன்மிகு
மாவட்டச் செயற்குழுக் கூட்டம்!
AIBSNLPWA கோவை
மாவட்டச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுவின் கூட்டம் இன்று (21/9/22) காலை 11 மணிக்கு சங்க அலுவலகத்தில்மாவட்டத் தலைவர் தோழர்
A.ராபர்ட்ஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட முழுமை யிலிருந்தும் 80 தோழர்களும் தோழியர்களும் திரளாக பங்கேற்றனர். மாவட்டச் செயலர் சமர்பித்த ஆய்படு பொருள்களை அவை ஏற்றுக்கொண்ட பிறகு மாநில துணைச் செயலர் தோழர் L.S. துவக்கவுரை ஆற்றினார். அதன்பிறகு
சேலம் மாநில மாநாட்டிலே தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய
மாநில சங்க நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்டச்
செயலர் தோழர் ஜெகதீஸ்வரன் ஆய்படுபொருளை விளக்கிப் பேசினார். சென்ற மாவட்ட மாநாட்டு
வரவு, செலவு கணக்கை சமர்பித்தார். நன்கொடையாக திரட்டப்பட்ட தொகையில் மாநாட்டு செலவு போக மீதமுள்ள தொகையில் மாநில மாநாட்டு நிதியாக ஒவ்வொரு
உறுப்பினர் சார்பாக தலா
ரூ.50/- கட்ட வேண்டிய தொகையை கட்டியுள்ளதாகவும்
மேலும் மாநில மாநாட்டு சார்பாளர்கள் கட்டணத்தை கட்டியதையும்
தெரிவித்தார். அதன்பிறகு அவை அவர் சமர்பித்த அறிக்கையை ஏற்றுக் கொண்டது.
அடுத்த
டிசம்பர் மாதம் பென்சனர் தினத்தை நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும். அமைப்பு தினத்தை முதியோர் இல்லம் சென்று உதவிகளை நல்குமாறு அகில இந்தியத் தலைமை அறைகூவல் விடுத்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் அதை நமது மாவட்டத்தில் நிறைவேற்ற முடியவில்லை. ஆகவே, பென்சனர் தினத்தன்று அப்பணியை நாம் மேற்கொள்வோம். நமது சங்க அலுவலகத்தின் வாடகை உயர்த்தப்பட்டுஉள்ளது. அந்த கூடுதல் செலவையும் பென்சனர் தினச் செலவையும் சமாளிக்க உறுப்பினர்களிடமிருந்து நிதி வசூலிக்கலாம் என்ற கருத்தை தெரிவித்ததோடு, அந்த நிதிக்கு தான் ரூ.10,000/-
வழங்குவதாக தோழர் ஜெகதீஸ்வரன் அறிவித்தார்.
விவாதத்தை
துவக்கி வைத்த மாநில துணைத் தலைவர் தோழர் B. அருணாசலம், கோவையின் புதிய GM திரு. பால்வண்ணன் அவர்களை நமது சங்க நிர்வாகிகள் சந்தித்து விவாதித்ததை விளக்கினார்.2014ல் திரு.பொற்பாதசேகர்,
திரு.ஷாஜகான் ஆகியோர் PGM, GM ஆக இருந்தபோது நமது
தோழர்களின் நல்லெண்ண முயற்சியின் காரணமாக இந்த அலுவலகம் சகாய வாடகையில் நமக்கு ஒதுக்கப்பட்டது.தற்போதைய அரசின், Monetize BSNL Land
and Buildings என்ற கொள்கை காரணமாக Audit objection வந்துள்ளது. ஆகவே, Fair Rent அடிப்படையில் வாடகை
முன் தேதியிட்டு உயர்த்தப்பட்டது. புதிய GM அவர்களிடம் நாம் அதை முடிந்த அளவு குறைக்குமாறு கேட்டுக் கொண்டோம். அதன் காரணமாக Rent கமிட்டி கூட்டத்திற்கு நமது நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கட்ட வேண்டிய அரியர்ஸை
தொகையை வெகுவாக குறைத்தும் 1/1/2022 முதல் ரூ.3500/- மாத வாடகை, அதற்குண்டான GST, ஆண்டொன்றுக்கு 5% உயர்வு என்று ஏற்கப்பட்டது. ஆகவே, நாம் அனைவரும் வாடகை பணத்தை சரிகட்ட தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று விளக்கினார். அடுத்து உறுப்பினர்கள் தங்கள் கருத்தை முன் வைத்தனர். தோழர் தணுஷ்கோடி, ரூ.5,000/- வழங்குவதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்
6 புதிய உறுப்பினர்கள்
நமது சங்கத்தில் இணைந்தனர்.
இறுதியாக,
மாவட்ட சங்க நிர்வாகிகள், நிரந்தர அழைப்பாளர்கள் மற்றும்
அனைத்து உறுப்பினர்களிடமும் பென்சனர் தின செலவு மற்றும் வாடகை
கட்டணத்தை செலுத்திட தாராளமாக நிதி வழங்கிடுமாறு கேட்டு
வேண்டுகோள் விடுவது என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
உடனடியாக தோழர் L.S ரூ.2000/-
வழங்கிட பல தோழர்கள் நிதி
வழங்கினர். கிருஷ்ண விலாசில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது, அனைவரும் உணவருந்திவிட்டு செல்லுமாறு அறிவித்து அலுவலகமே Housefull ஆகிடும் வகையில் திரளாக
பங்கேற்ற அனைவருக்கும் தோழர் சங்கிலியன் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.