Monday, 8 November 2021

 

நமது சங்கத்தின் மூத்த துடிப்பான  உறுப்பினர்  நமது  வாட்ஸப் குழுவின் அட்மின்  திரு மேஜிக் சூப்பர் செல்வம் நேற்று மாலை காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது இழப்பு நமக்கு ஈடுசெய்ய முடியாத இழப்புகோவையில் நடந்த மாநில மாநாட்டில் மிகச் சிறப்பான மேஜிக் நடத்தி அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தவர்
முதல் முதலில் விமானத்தில் தன் மேஜிக் நிகழ்ச்சிக்கு கோவையில் பிரச்சார நோட்டீஸ் விட்டு சிறப்பாக நடத்தியவர். Co-Axial  STR மனமகிழ் மன்றத்தில் பல ஆண்டுகளாக ஆண்டுவிழாவில் மேடையமைத்து நிகழ்ச்சியை தந்தவர் .
பொது நலம் கருதி நல்ல செயல்களையும் அன்னதானம் செய்த உத்தமர். நம்முடைய சங்க நிகழ்ச்சிகளில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒரு மணி இரண்டு மணி அளவுக்கு நிகழ்ச்சியை தந்தவர். உலக மேஜிக் சங்கத்திற்கு தமிழகத்தின் தலைவராக இருந்தவர்நல்ல பழுத்த அனுபவம் வாய்ந்த ஈகை குணம் மிக்க ஒரு உறுப்பினரை கோவை மாவட்ட சங்கம் இழந்திருக்கிறது.
அன்னாரை இழந்து வாட்டும் அவர் குடும்பத்தாருக்கு கோவை மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது
அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.