Thursday 21 December 2017

ஓய்வூதியர் தினம் ஊட்டி தொலை பேசிக மன மகிழ் மன்றத்தில்  16-12-2017 அன்று மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் தோழர் விஸ்வநாதன் தலைமை தாங்க , மாவட்ட செயலர் தோழர்.தாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ் மாநில துணைத்தலைவர் தோழர்.R . திருவேங்கடசாமி மற்றும் கோவை மாவட்ட செயலர் தோழர் B .அருணாசலம் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . 
அன்று உள்ளூரில் பேருந்து strike  இருந்தபோதும்கூட சிரமங்களை பொருட்படுத்தாமல் 52 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
மெடிக்கல் அலவன்ஸ் 19 தோழர்கள் பெற்று விட்டார்கள் இன்னமும் 36 தோழர்கள் பெற வேண்டும். அவர்களுக்கும் விரைவில் அலவன்ஸ் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடும்ப ஓய்வூதியர் திருமதி சுசீலா என்பவருக்கு குடும்ப ஓய்வூதியம் சுமார் 3 ஆண்டுகளாக வழங்கப்படாமலிருந்தது , நம் மாநில செயலர் தோழர் கே.முத்தியாலு மூலம் பெரு முயற்சிகள் எடுத்து அவருக்கு ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டு  நிலுவை தொகையும் அளிக்கப்பட்டுள்ளது. தன் நன்றியினை நம் சங்கத்திற்கு காட்டும் விதமாக அவராகவே ரூ 10,000/- நன்கொடை அளித்துள்ளார்கள். அவருக்கு நம் நன்றி. கோவை மாவட்டம்  ஓய்வூதியர் டைரக்டரி வெளியிட உள்ளது. எனவே ஊட்டி தோழர்களும் தங்கள் விவரங்களை கொடுத்தால் அவர்கள் பெயர் மற்ற விபரங்களையும் இணைத்து வெளியிட கோவை மாவட்ட சங்கம் முடிவெடுத்துள்ளது. சங்க அலுவல்களை நடத்துவதற்கு தொலைபேசியகத்தில் ஒரு அறை கேட்டுள்ளோம். PGM அவர்களும் தருவதாக கூறியுள்ளார்கள்.
2000க்கு முன்பாக ஒய்வு பெற்றுள்ள DOT தோழர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்துள்ள உயர்வு கிடைக்க சுமார் 3 மூத்த தோழர்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெருவாரியான தோழர்கள் 78.2 நிலுவைத் தொகை பெற்று விட்டார்கள். மாவட்ட அளவில் நம் சங்கத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் நடத்தினால் , ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை எடுத்துரைக்க வசதியாக இருக்கும் என்று விரும்புகிறார்கள். தனிப்பட்ட முறையில் AO விடம் கூட குறைகளை கூற முடியவில்லை. மாநில செயலருக்கு இது விஷயமாக கடிதம் எழுத உள்ளோம். 
DOT ஓய்வூதியர்க்கு கணக்கிடப்பட்டுள்ள ஓய்வூதியத்தில் தவறு இருப்பதை தோழர் திருவேங்கட சாமி கண்டு பிடித்து தபால் ஆபிஸின்  கணக்கீடு தவறு என்று கூறியுள்ளார். தவறினைக்களைய தபால் அதிகாரிகளை சந்திக்க வேண்டும்.
தோழர்கள் RT மற்றும் அருணாசலம் தங்கள் உரையில் 78.2 பெற்ற சாதனை, 60:40 தகர்த்த சாதனை, பணியில் இருப்போருக்கு இல்லாத மருத்துவ அலவன்ஸ் -ஐ ஓய்வூதியர்களுக்கு பெற்று தந்த சாமர்த்தியம், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நமக்கும் விஸ்தரிக்க நாம் எடுத்து வரும் முயற்சிகள் மற்றும் 78.2 IDA அடிப்படையில் 01-01-2007 முதல் நிலுவை பெறுதல் , gratuity , leave encashment , போன்றவற்றை நாம் பெற நம் சங்கம் பெரு முயற்ச்சி எடுத்து வருகிறது. என்று தெளிவாக எடுத்துரைத்து பேசினார்கள். திரு நகரா அவர்கள் ஓய்வூதிய அனாமலி குறித்து தொடர்ந்த வழக்கில் 17-12-1982 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டு ஓய்வூதியர்கள் வாழ்வில் ஒளியேற்றப்பட்டுள்ளது. நமக்கும் அவ்வப்போது உயரும் விலைவாசிக்கேற்ப பஞ்சப்படி வழங்கினால்தான் கண்ணியமான வாழ்க்கையினை நடத்த முடியும் என்று தீர்ப்பு அளித்ததின் பேரில் நாம் DA பெற்று வருகிறோம். உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த பாடுபட வேண்டுகோள் விடுத்தார்கள். 
மாவட்ட பொருளாளர் நன்றி உரைக்குப்பின் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.





















No comments:

Post a Comment