Thursday 31 May 2018

பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களின்  பொறுப்புகளில் இருக்கும்  நம் மாநிலத் தலைவர் தோழர் வி இராமாராவ் அவர்கள் சென்னை மெட்ரோவில் பயண டிக்கெட் விலை மிக அதிகமாக உள்ளது.  விலையினைக் குறைத்தால் ஏழைகள் பயனடைவர் என்று ஆணித்தரமாக தமிழ் இந்து நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி உள்ளார். இதற்காக கையெழுத்து இயக்கமும் துவக்கி விலை குறைப்புக்கு அயராது பாடு பட்டு வருகிறார். அந்த நேர்காணலின் ஒரு பகுதி 29-5-18 அன்றைய நாளிதழில் வெளியாகியுள்ளது. அதன் பதிப்புதான் இது.
பணக்காரர்களுக்கு மட்டுமானதா சென்னை மெட்ரோ?-வி.ராமாராவ் நேர்காணல்
Published :  29 May 2018  07:13 IST
சென்னை மெட்ரோ ரயில்கள் 2016-  முதல் முறையாக  இயங்கத்தொடங்கியபோது அதிகபட்ச கட்டணம் ரூ.40. அதுவே பலருக்கு அப்போதுஅதிர்ச்சியைக் கொடுத்ததுசென்னையைவிட பணக்கார நகரமாகக் கருதப்படும்பெங்களூருவிலேயே இதைவிட குறைவான கட்டணத்தில் மெட்ரோ ரயில்கள்இயக்கப்படுவதை அப்போதே பலரும் சுட்டிக்காட்டினர்இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது சென்னை மெட்ரோ ரயில் பயணிக்கும் தூரம்விரிவடைந்திருக்கிறதுஆனால்கட்டண விஷயத்தில் அதிர்ச்சி தொடர்கிறது.சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் செல்வதற்கான கட்டணம்ரூ.70. மெட்ரோ ரயிலில் பயணிப்பதில் மக்களுக்கு உள்ள ஆர்வம் ஆரம்ப நாட்கள்கட்டணமில்லா அனுமதியின்போது வெளிப்பட்டதுமூன்று நாட்களில் கிட்டத்தட்ட 4லட்சம் பேர் பயணித்தார்கள்ஏன் குறைவான கட்டணத்தில் அதிகமானோரைக்கையாண்டு லாபம் ஈட்டும் உத்தியைக் கையாளக் கூடாது மெட்ரோஇதுவும்இன்னமுமாக நிறையப் பேசுகிறார் வி.ராமாராவ்சென்னை போக்குவரத்துவிழிப்புணர்வு மையம் என்ற பயணியர் நலன்சார் அமைப்பின் இயக்குநர்.
இந்தியாவிலேயே மெட்ரோ ரயில் பயணத்துக்கு அதிகக் கட்டணம்வசூலிக்கப்படுவது சென்னையில்தான்இது எந்த அளவு சரியானது?
சென்னையில் குறைந்தபட்சக் கட்டணம் முதல் இரண்டு கிலோ மீட்டர்களுக்கு ரூ.10.டெல்லியிலும் முதல் இரண்டு கி.மீக்கு ரூ.10. கொல்கத்தாவில் முதல் ஐந்து கி.மீக்குரூ.5 தான்கொல்கத்தாவில் அதிகபட்சக் கட்டணம் ரூ.25. இந்தக் கட்டணத்தில் 25-30கி.மீ தூரம் பயணிக்க முடியும்டெல்லியில் அதிகபட்சக் கட்டணம் ரூ.60. அதுவும் 32கி.மீக்கு மேல் போனால்தான் இந்தக் கட்டணம்சென்னையில் 20 கி.மீக்கு கட்டணம்ரூ.60 அதற்கு மேல் போனால் ரூ.70/-. தினமும் பயணிப்பவர்கள் ஸ்மார்ட் கார்டுவாங்கிக்கொள்பவர்களுக்கு கொடுக்கப்படும் 10%, 20% சலுகைகளும் ஒட்டுமொத்தகட்டணச் செலவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.
மக்கள் வரிப் பணத்தில் அரசால் உருவாக்கப்படும் ஒரு பொதுப் போக்குவரத்துத்திட்டத்துக்கு இவ்வளவு அதிகக் கட்டணம் வசூலிப்பது எந்த வகையிலும்சரியானதல்லடெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணங்களை நிர்ணயிக்க குழுக்கள்அமைக்கப்பட்டிருக்கின்றனசட்டப்படியே இது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.பிறகுமக்கள் கருத்தையும் கேட்ட பிறகு அந்தக் குழுதான் கட்டணத்தைநிர்ணயிக்கும்இங்கு அதுபோன்ற எந்த ஏற்பாடும் இல்லைஅதிகாரிகளேகட்டணத்தை நிர்ணயித்துவிடுகிறார்கள்கட்டண விவகாரத்தில் எங்களைப்போன்ற பயணியர் அமைப்புகளின் குரல் கேட்கப்படுவதே இல்லை. 2016-ல் மெட்ரோரயில் சேவையைத் தொடங்கும் முன்எங்கள் அமைப்பு உட்பட சில அமைப்புகள்,குடியிருப்பு நல சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை வைத்து ஒரு கூட்டம்நடத்தினார்கள்அதிலும் கட்டணம் பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லைடெல்லி,கொல்கத்தாமற்ற நகரங்களின் அளவுக்கே இங்கும் கட்டணம் இருக்க வேண்டும்என்பதுதான் எங்களது கோரிக்கை.
மெட்ரோ ரயில் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திருக்கிறதா?
நான்கு பேர் கொண்ட குடும்பம் மெட்ரோ ரயிலில் மீனம்பாக்கத்திலிருந்துசென்ட்ரலுக்கு செல்ல ரூ.300 வரை செலவாகிவிடும்அவர்கள் கால் டாக்ஸிகளில்சென்றாலும் கிட்டத்தட்ட அதே கட்டணம்தான் ஆகும்அதுவும் வீட்டு வாசலிலிருந்துஎங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்துக்கே சென்றுவிடலாம்பிறகு,போக்குவரத்து நெரிசல் எப்படிக் குறையும்.? மெட்ரோ ரயில் கட்டணம்குறையாதவரை அதையும் நாம் எதிர்பார்க்க முடியாது.
மெட்ரோ ரயில் திட்டத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஆகும் செலவுகளைசமாளிக்க இந்தக் கட்டணம் இன்றியமையாதது என்று நிர்வாகம் சொல்கிறதே?
டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு நாளைக்கு 27 லட்சம் பேர் பயணிக்கிறார்கள்.கொல்கத்தாவில் 6.3 லட்சம் பேர்சென்னையில் தினமும் மூன்று லட்சம் என்றுஎதிர்பார்க்கப்பட்டதுஆனால் 33,000 பேர்தான் பயணிக்கிறார்கள்அதிகக் கட்டணம்வசூலிப்பதைவிட கட்டணத்தைக் குறைத்து அதிக மக்களை ஈர்ப்பதன் மூலமாகவும்செலவுகளைச் சமாளிக்கலாம்ஆனால்அதற்கு 3-4 ஆண்டுகளாவது காத்திருக்கவேண்டும்பிறகுகொஞ்சம் கொஞ்சமாகக் கட்டணத்தை உயர்த்தலாம்அதுவரைநஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்இது நஷ்டம் அல்லமுதலீட்டின்ஒரு பகுதிதான்.
இந்த உத்தி எடுபடுமா?
ஏன் எடுபடாதுபுறநகரங்களிலிருந்து சென்ட்ரல்எழும்பூர் ரயில் நிலையங்களுக்குதினமும் 1.5 லட்சம் பேர் வருகிறார்கள்இதில் பாதிப் பேராவது மெட்ரோ ரயிலைப்பயன்படுத்துவார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள்ஆனால்ரூ.5, ரூ.10கொடுத்து மின்சார ரயில்களில் செல்பவர்கள் ரூ.50, ரூ.70 செலவழித்து இதற்குவருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்கட்டணம் குறைந்தால் பயணிகள்அதிகரிப்பர்கொல்கத்தாவில் ஐந்து ரூபாய்க்கு மெட்ரோ ரயில் ஓடுகிறதேஎப்படிஓடுகிறது?
கட்டணம் தவிர வேறு என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன?
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் பிரமாதமாகஇருக்கின்றனசாய்வுப்படிக்கட்டுகள் (ரேம்ப்வைத்திருப்பதுமாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டுள்ளதைக்காட்டுகிறதுஆனால் சில ரயில் நிலையங்களுக்குச் சென்றுசேர்வதேபிரச்சினையாக இருக்கிறதுஉதாரணமாகநங்கநல்லூர் சாலை ரயில்நிலையத்துக்கு நங்கநல்லூரிலிருந்து வருபவர்கள் சாலையில் ரயில் நிலையத்தின்எதிர்ப்புறம் இறங்கி சாலையைக் கடக்க வேண்டியிருக்கிறதுஆலந்தூர் போன்றரயில் நிலையங்களில் பாதசாரிகளிக்கான உயர் பாலங்கள் (foot overbridge) உள்ளன.எல்லா இடங்களிலும் அனைத்து நிலையங்களுக்கும் இதுபோன்ற வசதிகள்செய்துதரப்பட வேண்டும்தமிழக அரசால் இயக்கப்படும் சிறு பேருந்துகள்பிரதான சாலைகளையே தொடுகின்றனகாலனிகள்தெருக்கள் வழியாகச்செல்வதில்லைஉட்புறச் சாலைகளைத் தொடும் பேருந்துகளை இயக்குங்கள் என்றுசென்னைப் போக்குவரத்து கழகத்திடம் சொல்லியாகிவிட்டதுஅவர்கள் அதைக்கவனிப்பதாகவே தெரியவில்லை.
நன்றி : தமிழ் இந்து / 29-5-18