Tuesday 25 July 2017


IBSNLPWA  அமைப்பு தினத்தை கொண்டாடுங்கள்.
நம் சங்கத்தை வலுப்படுத்துங்கள்.
அனைத்திந்திய BSNL ஓய்வூதியர் நல சங்கம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ம் தேதி உருவாக்கப்பட்டது.இந்த நாள் BSNL ஓய்வூதியர்களின் வாழ்வில் ஒரு பொன்னாள் .எனவே இந்த அமைப்பு தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம்.
ஓர் அருமையான அமைப்பு
பணி ஒய்வு பெற்றபின் நமக்குள் CGM ஓய்வூதியர் , ரெகுலர் மஸ்தூர் ஓய்வூதியர் எனும் பாகுபாடு நம்மிடையே கிடையாதுசேவையில் நாம் இருந்த போது எந்த பதவியில் இருந்திருந்தாலும்,ஒய்வு பெற்றபின் நாம் எல்லோருக்கும் ஒரே பெயர்தான் அது " BSNL ஓய்வூதியர் " என்பதுதான்ஆகவேதான் இந்த சங்கத்தில் ஒய்வு பெற்ற CGM முதல் RM வரை அனைவரும் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளோம்.
சேவையில் இருந்த போது நாம் பல்வேறு அமைப்புக்கள்சங்கங்களில் அங்கத்தினர்களாக இருந்து பணியாற்றினோம்.அவையனைத்தும் ஒய்வு பெற்ற பின் மறைந்து விட்டன.ஒரே சங்கம் ,ஓய்வுதியர் நலனே நம் கடமை என்று இச்சங்கத்தில் இணைந்து விட்டோம்.
ஓய்வூதிய மாற்றம்:
BSNL நிறுவனம் துவங்கப்படுவதற்கு முன்பாக நமக்கு ஓய்வூதியம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஒரு கால வரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்க்கொண்டோம் போராட்டத்தின் முடிவில் மத்திய அரசும் நமக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. 2009 ல் அதிகாரிகளின் ஊதிய விகிதம் 01-01-2007 மு தல் மாற்றி அமைக்கப்பட்டதுஆனால் அதே சமயம் ஒய்வு பெற்ற அதிகாரிகளின் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட்ட வில்லை .நாம் புது டில்லி சென்று ஓய்வூதிய மாற்றத்திற்காக போராடியபோது  " BSNL என்பது ஒரு பொதுத்துறை நிறுவனம்.எனவே ஓய்வூதிய மாற்றமெல்லாம் கிடையாது " என்று DOT மறுத்து கூறிய போது தான் நமக்கென்று ஓர் அனைத்திந்திய அமைப்பு தேவை என்ற நிலை ஏற்பட்டது. 
அனைத்திந்திய   அமைப்பு உருவாக்குதல்
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 454 ஓய்வூதியர்கள் 20-08-2009 அன்று சென்னையில் ஒன்று கூடி பிரச்சினைகளை எடுத்துக்கூறி தீர விவாதித்து ஒரு மனதாக AIBSNLPWA அமைப்பினை உருவாக்கினார்கள்.இந்த அமைப்பிற்கு தோழர்கள் முத்தியாலு மற்றும் ராமன்குட்டி முறையே தலைவர் மற்றும் அகில இந்திய பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செய்யறியாதனவற்றை செய்து காட்டினோம்.
எத்தனையோ பல்வேறு கோரிக்கைகள் ஓய்வூதியர்களிடையே குவிந்து கிடந்த போதிலும்," 2007 க்கு முன் ஒய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் " எனும் கோரிக்கையை முக்கியமானதாக கருதி முன்னிறுத்தினோம்ஓய்வூதிய மாற்றம் பெற்றிட நாம் நடத்திய தர்ணாக்கள்,போராட்டங்கள் பல பலபிறகு அரசு ஓய்வூதிய மாற்றத்திற்கான உத்தரவினை 15-03-2011 அன்று வெளியிட்டதுஇது நாம் பெற்ற மாபெரும் வெற்றியாகும்கிட்டத்தட்ட 60,000 ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதியம் சுமார் இரு மடங்காக உயர்வடைந்ததை கண்டு மகிழ்ச்சியுற்றனர்.
நாம் வென்றெடுத்த மற்ற கோரிக்கைகள்
நம் சங்கம் நாளடைவில் பல்வேறு கோரிக்கைகளை நிர்வாகத்தின் முன்வைத்து வென்றுள்ள.அவைகளில் ஒருசில (1) உரிய காலத்தில் IDA , (2) ஓய்வூதிய கணக்கீட்டிற்கு Extra increment (3) சேவையில் இருப்போர்க்கு இணையான மருத்துவ ஈட்டு பெறுதல்.(4) குடும்ப ஓய்வூதியர்க்கும் MRS வசதி .(5) Broad band கட்டணத்தில் சலுகை வசதி (6) காலியாக இருக்கும் குடியிருப்புக்களை ஓய்வூதியர்களுக்கும் வழங்குதல் (7) நமக்கும் இரவு நேரங்களில் இலவச தொலைபேசி அழைப்பு வசதி.(8)ரசீது இல்லாமல் மருத்துவ அலவன்ஸ் பெரும் வசதி போன்றவற்றை முக்கியமாக சொல்லலாம் .பென்ஷன் அனாமலி வழக்காடு மன்றம் மூலமாக உத்தரவு பெற காத்திருக்கிறோம்இவை அனைத்துக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் துயரம் நம் சங்கத்தால் களையப்பட்டு நிம்மதி அடைந்துள்ளனர்.
60% : 40% விகிதத்தை தகர்த்து, 78.2% IDA இணைப்பு உத்தரவு பெற்றது
மூன்றாண்டு கடும் போராட்டங்களுக்குப் பின் ஓய்வூதிய மாற்றத்திற்கு தடையாக இருந்த 60:40 சத விகிதாச்சார முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு 78.2% சத IDA இணைப்பு உத்தரவுகள் வெளியாகினஇது நம் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை .நம்முடைய இந்த மாபெரும் வெற்றியினைக்கண்டு சேவையில் உள்ள தோழர்களும் மகிழ்வெய்தினர் . நம் சங்க உறுப்பினர்களின் மகிழ்ச்சியும் , ஆனந்தமும் எல்லையற்றதாக விளங்கின என்று கூறினால் அது மிகையல்ல.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷன் தன் பரிந்துரைகளை அளித்துள்ளதுஅதன் அடிப்படியில் நம் ஓய்வூதியங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறோம்இந்த கோரிக்கையில் நாம் வெற்றி பெற்று விட்டால் , எப்பொழுதெல்லாம் மத்திய அரசு தன் ஓய்வூதியர்களின் ஓய்வூதியங்களை மாற்றி அமைகிறதோ , அப்பொழுதெல்லாம் நம் ஓய்வூதியங்களும் மாற்றி அமைக்கப்படும் .
மத்திய செயற்குழு மாநாட்டின் முடிவுசெய்துள்ளதுசெய்த வண்ணம் உள்ளதுஇதன் பலனாக நம் ஓய்வூதியர்கள் மத்திய அரசு ஓய்வூதியர்களை காட்டிலும் மிக நல்ல நிலையில் உள்ளனர்ஓய்வூதியர்கள் இச்சங்கத்திற்கு நன்றி பாராட்டுவது எனில் அது உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது மூலமாகத்தான் இருக்க .வேண்டும்..BSNL  ல் ஓய்வூதியர்கள் சுமார் 2 லட்சம் பேர்கள் உள்ளனர்ஓய்வூதியர்கள் அமைப்புகளில் நம் அமைப்புதான் மிகப்பெரியதுஆனால் நம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் கூட இல்லைமற்ற அமைப்புகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.எனவே மிக அதிக எண்ணிக்கையில் ஓய்வூதியர்கள் எந்த வித சங்கத்திலும் உறுப்பினர் ஆகாமல் தனியே இருக்கின்றனர்அவர்களை கண்டறிந்து நம் சங்க உறுப்பினராக ஆக்க வேண்டும்இது அனைவரின் கடமையாகும்.
நமக்கு சில SSA க்களில் கிளை அமைப்பு இல்லைஇந்த நிலைப்பாடும் தீவிரமாக  விவாதிக்கப்பட்டு ,கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது." சில மாநிலங்களில் ,சில SSA க்களில் நம் கிளை அமைப்பு இல்லாத நிலை உள்ளது.கிளை அமைப்புகள் இல்லாத அத்துணை SSA க்களிலும் நம் கிளைகளை ஏற்படுத்த எல்லா முயற்சிகளும்  எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்."
அமைப்பை உறுதிப்படுத்த தக்க தருணத்தில் உழைத்திடுவோம்.78.2%    IDA நிலுவையில் பெற்றபின் அதிகப்படியான ஓய்வூதியர்களை நம் உறுப்பினர்களாக்க வழிமுறைகள் மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதுநம் தோழர்களும் 78.2% நிலுவைத்தொகை பெற்று வருகிறார்கள்இந்த நிலுவைத்தொகை பெற முக்கிய காரணமாக இருக்கும் நம் சங்க
சாதனைகளை எடுத்துக்கூறி நம் உறுப்பினராக்க முயலுவதில் எந்தவித கஷ்டமும் இருக்காதுஅதைப்போல ஆண்டு சந்தா தாரர்களை ஆயுள் உறுப்பினராக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
நாம் நம் குஜராத் தோழர்களை மிகவும் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்..
குஜராத்தில் "பவ நகர்  " பகுதியில் நம் சங்கத்தின் சார்பில் ஒரு புதிய கிளையை அமைத்து அதில் சுமார் 200 தோழர்களை உறுப்பினர்களாக தோழர் பிரம்பட் இணைத்துள்ளார்.குஜராத்தில் இது நமக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.இதைப்போலவே கர்நாடகத்தில் 2 புதிய கிளைகளும்உத்தர பிரதேசத்தில் சில புதிய கிளைகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளனஇது வெகுவாக பாராட்டப்பட வேண்டிய ஒன்றுஜார்கண்ட் மாநிலத்தில் நம் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஆயுள் உறுப்பினர்கள் என்ற செய்தி மிகவும் மகிழ்வூட்டக்கூடியதாக உள்ளதுஎனவே அனைத்து SSA களிலும் சரியாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்த இதுவே தக்க தருணமாகும்.
ஆகஸ்டு மாதத்தில் நம் அமைப்பு தினத்தைக் கொண்டாடுங்கள்
நம் சங்கம் உருவான தினமான ஆகஸ்ட்/20 எல்லா கிளைகளிலும் கொண்டாடப்பட வேண்டும்.ஒருவேளை ஆகஸ்ட் 20ல் கொண்டாட முடியவில்லை எனில் ஆகஸ்ட் மாதம் ஏதாவது ஒரு நாளில் விழா எடுத்து கொண்டாடலாம்.அப்போது நம் சாதனைகளை பட்டியலிட்டு கூறுங்கள்.7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நாமும் பெற்றிட பாடுபட்டு வரும் நம் சங்கத்தின் மேன்மைகளை எடுத்துக்கூறுங்கள்.
சேவையில் தற்சமயம் இருக்கும் தோழர்களே நம் எதிர்கால பலம்,சொத்துநம் சாதனைகளை பட்டியலிட்டு நோட்டிஸ்களாக/கையேடுகளாக அச்சிட்டு அவர்களுக்கு வழங்குங்கள்.ரித்திரம் போற்றும் சாதனைகளை புரிந்துள்ள ஒன்றுபட்ட நம் சங்கத்தின் சிறப்புக்களை விளக்குங்கள்மத்திய , மாநில நிர்வாகிகளை கூட்டத்திற்கு அழைத்து தீவிரமாக ஆலோசியுங்கள்  அமைப்பு நாளை கொண்டாடாத கிளையே தமிழ் மாநிலத்தில் இல்லை என்ற நிலை உருவாகட்டும்.
வாருங்கள் தோழர்களே  நம் சங்கத்தை பலப்படுத்துவோம்.
ஒன்றுபடுவோம் ,நம் .உறுப்பினர் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவோம்.
நம் நலம் காக்கும் சங்கம் . எதிர்காலம் நம் வசம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
க.முத்தியாலு
தமிழ் மாநில செயலர்

No comments:

Post a Comment