Friday 7 July 2017

தோழர்களே/ தோழியர்களே உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
78.2% நிலுவைத்தொகை பெற்றதைக்காட்டிலும் அதற்கான கால தாமதம் நமக்கு மிகுந்த சோர்வினை அளிக்கிறது.மாநில சங்கமும் , மாவட்ட சங்கமும் DOT செல் , பாரத ஸ்டேட் வங்கி போன்ற வங்கிகளின் மேல்மட்ட அதிகாரிகளுடன் பலமுறை நேரில் சென்று விவாதித்தும் , பண பட்டுவாடா இன்னமும் வேகமெடுக்கவில்லை .இந்த மாதம் 15 தேதிக்குள் ஓரளவு பட்டுவாடா செய்யப்பட்டுவிடும் என உறுதி அளித்துள்ளனர். கோவைப்பகுதியில் 78.2% arrears orders கையில் வரப்பெற்றும் 3,4 மாதங்களாக நிலுவைத்தொகை வந்து சேரவில்லை.மாவட்ட செயலரும், மாநில பொறுப்பாளர் தோழர் RT யும் RS புரம் HPO , Main PO ,SBI உயர் அதிகாரிகள் ,IOB Regional அலுவலகம்,இந்தியன் வங்கி ,போன்ற பல அலுவலகங்கள் சென்று உயர் மட்ட அதிகாரிகளிடம் பேசினோம்.
ஒரு நாளைக்கு 4 அல்லது 5 பேர்களுக்கு மேல் பணம் பட்டுவாடா செய்ய இயலாமல் இருப்பது கொடுமை.ஓய்வூதியரின் மன ஓட்டத்திற்கேற்ப arrears கிட்டாத நிலைமை மிகவும் வருத்தமளிக்கிறது. வந்திருக்கக்கூடிய 78.2% உத்தரவுகளிலும் அநேக குளறுபடிகள் உள்ளன.பென்சன் தாரரின் வங்கி கணக்கு எண் குறிக்கப்படவில்லை., தபால் நிலைய முகவரிகள் மாற்றி எழுதப்பட்டுள்ளன. தபால் நிலையத்திலிருந்து பாரத ஸ்டேட் வங்கிக்கு கணக்கு மாற்றப்பட்டு 8,9 மாதங்களாக பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ஓய்வூதியம் பெற்றுவரும் ஒரு தோழருக்கு arrears உத்தரவு தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சிலருக்கு PPO எண் மாற்றி அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் சரி செய்து நிலுவைத்தொகை கைக்கு வந்து சேர மீண்டும் கால தாமத மாகுமோ என்ற அச்ச உணர்வு நெஞ்சை கவ்வி நிற்கிறது.
155 தோழர்களுக்கு Extra Increment வழங்கப்பட்டுள்ளதாக சொல்லி DOT Cell நம் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு Service புத்தகங்களை திரும்ப அனுப்பியுள்ளனர். அதிலும் சில தவறுகள் உள்ளன.மாவட்ட செயலர், மாவட்ட தலைவர் தோழர் குருசாமி, மாநில பொறுப்பாளர் தோழர் RT , மாவட்ட பொறுப்பாளர் தோழர் கோவிந்தராஜன் ஆகியோர் Nodel officer திரு ரவி AGM அவர்களை சந்த்தித்து விவாதித்தனர்.பிறகு CAO திரு கேசவன் அவர்களையும் சந்த்தித்தனர் . அவர் துரிதப்படுத்துவதாக கூறியுள்ளார்.
அருமைத் தோழர்களே மூத்த குடிமக்களாகிய நமக்கு அதுவும் கடுமையாக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ள நமக்கு இந்த காலதாமதம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும் என்று தெரியும். இது சரி செய்யப்பட வேண்டும். நிச்சயம் சரி செய்யப்படும். சற்று பொறுத்துக்கொள்வோம். மாநில செயலர் தோழர் முத்தியாலு Circle Office ,DOT Cell ,பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் ஆகியோர்களை தினமும் தொடர்ந்து சென்று பார்த்து பிரச்சினைகளை எடுத்துரைத்து வருகிறார்.சிலவற்றில் முன்னேற்றமும் கண்டுள்ளோம். கடந்த 2, 3 வருடங்களாக தீராத பிரச்சிலைகளாக இருந்த தோழர்கள் மோகனன் ,மைக்கேல் டிசோசா ,ஜோதிராஜ் ,கேசவதாஸ் போன்ற பலரது பிரச்சினைகள் தீர்த்தது வைக்கப்பட்டுள்ளன.
பென்ஷன் அதாலத் ஈரோட்டில் 11-08-2017 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அன்று நம் பிரச்சினைகள் விவாதிக்கப்படும்.அதற்கு முன்பாகவே தீர்க்கப்பட்ட தகவல் நம்மை வந்து சேரும்.
அன்புத்தோழர்களே நிலுவைத்தொகை வரப்பெற்றவர்கள் தயவு செய்து மாவட்ட சங்கத்திற்கு தெரியப்படுத்தவும்.மருத்துவ அலவன்ஸ் க்கு இறுதி வடிவம் தயாரிக்கப்பட்டு வருகிறது.Vendor Code பிரச்சினையில் நம்முடைய கோரிக்கையினை நிர்வாகம் ஏற்றுள்ளது , அனைத்து ஓய்வூதியருக்கும் Vendor Code பதிவு செய்யப்படும் .DCRG கொடை 20 லட்சத்திற்கு உயர்த்தப்பட்டு 8, 9 ஓய்வூதியர்களுக்கு பரிந்துரை மேலிடத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.MK கீதா , மருதாச்சலம் , நூர் அலாம் போன்றவர்களுக்கு DOT Order அனுப்பியுள்ளது. E1, E2 நிலுவை பெற்றவர்களுக்கு Pension Enhancement விபரங்கள் DOT க்கு அனுப்பப்பட்டுள்ளன. ஓய்வூதியர்களுக்கும் Night Free Call சலுகை வழங்க நிர்வாகத்திடம் பேசினோம். நிர்வாகமும் நம் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு ஆவண செய்யும்படி ஹைத்ராபாத்திற்கு பரிந்துரைத்துள்ளனர்.
தோழர்களே நம் ஓய்வூதியர்கள் பிரச்சினைகளை சுமையாக கருதாமல் அவற்றை வெற்றி முனைப்புடன் விரைவாக தீர்த்து வைக்க மாவட்ட சங்கம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. நம் சங்கத்தில் ஓய்வூதியர் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும். குறிப்பாக குடும்ப ஓய்வூதியர்களை நம் சங்க உறுப்பினராக்க பாடுபடுவோம்.
வணக்கம் 
தோழமை வாழ்த்துக்களுடன் 
B .அருணாசலம்,
மாவட்ட செயலர்,
AIBSNLPWA கோவை மாவட்டம்.






















































No comments:

Post a Comment