District President R.ROBERTS Mob 94428 42880 District Secretary: R. JEGADEESWARAN Mob: 94869 77488 District Treasurer : S. KOTTIAPPAN Mob : 94861 05152 Web e-mail: kovaidivn@gmail.com Web Master : N.MOHAN 80560 66995
Tuesday, 31 March 2020
Sunday, 29 March 2020
APPEAL FROM CHQ
Some District Secretaries wanted an appeal to be sent for
donations. CHQ is enclosing an EXTRA ORDINARY APPEAL. All Circle/ District
Secretaries are requested to take this appeal seriously and do the needful.
P Gangadhara Rao, GS.
AN APPEAL FROM TAMILNADU CIRCLE
அன்புள்ள
தோழர்களே, நமது அகில இந்திய சங்கம் கொள்ளை நோயான கொரனவை எதிர் கொள்ள மத்திய, மாநில அரசுகள் போர்கால நடவடிக்கை எடுத்து வருகின்றன. நமது அமைப்பு எப்போதுமே இது போன்ற தருணங்களில் நிதியை வழங்கி உள்ளது. இன்று எவரும் வெளிய வரமுடியாத சூழலில் உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள்
இம்மாதம்
நாம் வாங்கும் ஓய்வுதியத்தில் ஒரு நாள் ஊதிய த்தை தமிழக முதலைமைச்சரின் Covid 19, நிவாரண நிதிக்கு வழங்குமாறு அன்புடன் மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. நாடு ஒரு பேரழிவை ஒழிக்க மும்முரமாய் இருக்கும்போது நாம் ஒன்றாய் எழுந்து நின்று கை கொடுப்போம். Online ல் செலுத்த
முடிந்தோர் நமது மாநில சங்க கணக்கிற்க்கு உடனடியாக அனுப்பி வைக்கவும். நெட் பாங்கிங் வசதி இல்லாதவர்கள் , ஊரடங்கு சட்டம் நீக்கிய பிறகு வங்கிக்கு சென்று Money Transfer செய்யலாம். மாவட்ட செயலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும்.
நம்மால்
முடியும். தேசம் நமது. கொடிய நோயை அறவே அகற்றும் புனித போரில் நாம் முன்நிற்போம்.
தோழமை
வாழ்த்துக்களுடன்,
வீ
ராமராவ் மாநில தலைவர்
ஆர்
வெங்கடாச்சலம், மாநில செயலாளர்.
Account
Name: All India BSNL Pensioners Welfare Association, Tamilnadu
circle.
Name of the Bank : City Union Bank,
Branch Name : Nanganallur
branch, Chennai 61
SB A/C Account
No : 104001000409247.
IFSC : CIUB0000104.
An Appeal From District Association
வணக்கம்
அருமைத்தோழர்களே,
பணிவான
வேண்டுகோள்...
1.கொரோனா
என்ற மாபெரும் அரக்கனின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க நம்மை மத்திய மாநில அரசுகள் ஏப்ரல் 14 வரை (அத்தியாவசியப் பொருட்களின் தேவையன்றி) தேவையில்லாமல் படி தாண்டக்கூடாது என்று 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. லட்சுமணன்
போட்ட கோட்டை சீதை தாண்டியதால் இராவணனால் துன்பம் வந்தது. பிரதமர்
தமிழக முதல்வரின்
கோடுகளை (144) தாண்டாமல் கலியுக இராவணனிடமிருந்து (கொரோனா) நம்மை பாதுகாத்து கொள்வோம். இந்த
சூழ்நிலையில் நம் அங்கத்தினர் ஒவ்வொருவரும் அகில இந்திய பொதுச்செயலர் திரு. கங்காதரராவ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஒரு நாள் ஓய்வூதியத்தை மாநில சங்கத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வேண்டுகோள்..2...
இந்த
வைரஸின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உங்கள் அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை மாமன் மைத்துனன் மற்றும் உயிர் நண்பர்கள் என்று எத்தனை பேர் வெளியே வரமுடியாமல் இருப்பர். வேலை
இன்றி பட்டினியால் வாடுவோரும் இருப்பர். அவர்களுக்கு உணவும் மருந்தும் வாங்கி கொடுத்து (அவர்களிடம் மனஸ்தாபம் இருந்தால் கூட அதை மனதில் கொள்ளாமல்) உதவினீர்கள் என்றால் உங்களுக்கு புண்ணியம். இந்த உலகில் போதும் என்று சொல்லக்கூடியது உணவு ஒன்றுதான். உப்பிட்டவரை
உள்ளளவும் நினைப்பார்கள்.
நன்றி!
ஆர். திருவேங்கடசாமி
செயலாளர்
அகில
இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கம்,
கோவை மாவட்டம்
Thursday, 26 March 2020
Wednesday, 25 March 2020
Monday, 23 March 2020
அருமை தோழர்களே , தோழியர்களே , கரோனா வைரஸ் குறித்து கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருப்பதால் நமது மாவட்ட சங்க அலுவலகம் (CTO) மார்ச் 31ம் தேதி வரை செயல் படாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.... நீங்களும் மத்திய , மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட சங்கம் சார்பில் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்....
Saturday, 21 March 2020
அன்புத் தோழர்களே ,
வணக்கம்.
உலகமெங்கும் கொரானா வைரஸ் நோய் தன் கோரப்பிடியினை மனித உயிர்களின் மேல் தாக்கி மரணமடையச் செய்து வருகிறது . இந்தியாவிலும் , தமிழ்நாட்டிலும் கொரானா வின் தாக்கம் இருப்பதாக செய்திகள் வருகின்றன .தமிழ்நாட்டில் ஒரு சிலர் இந்நோயினால் மரணமடைந்துள்ளதாக அறிவிப்புகள் வருகின்றன.
இந்நோய் மனிதர்கள் மூலமாக , காற்றில் பறந்து தாக்குகிறது .60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களை கொரானா வைரஸ் மிக சுலபமாக தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு இன்றுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் தகவல் .
இந்நோய் பரவுவதை தடுக்க நாம் வீட்டிலேயே இருந்து விட்டால் நம்மை காத்துக் கொள்ள முடியும்.
நம் பாரத பிரதமரும் தம் தேசிய பரப்புரையில் 22-03-2020 ஞாயிறு காலை 7-00 மணியிலிருந்து இரவு 9-00 மணிவரை வெளியில் எங்கும் போகாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் படி கூறியுள்ளார். அதைப்போல நாமும் ஞாயிறு அன்று எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டு வீட்டிற்குள்ளேயே இருப்போம். நம்மையும் , நாட்டையும் கொரானா நோயிலிருந்து பாதுகாப்போம் .
இந்த அறிவுரை செய்தியை நம் தோழர்கள் , மற்றும் அனைத்து நண்பர்கள் , உறவினர்களுக்கும் எடுத்துக் கூறி அறிவுறுத்தவும்.
நம் நலம் காப்போம் ! நம் தேசத்திற்கு வளம் சேர்ப்போம் !!
தோழமை வாழ்த்துக்களுடன் ,
G .குருசாமி , மாவட்ட தலைவர்
R .திருவேங்கடசாமி மாவட்ட செயலர்
மற்றும் சங்க நிர்வாகிகள்
AIBSNLPWA ,
கோவை மாவட்டம் .

Subscribe to:
Posts (Atom)