Wednesday 27 February 2019

26-02-2019 அன்று மாலை 6-00 மணி அளவில் கோவை மாவட்ட செயலர் தோழர் R .திருவேங்கடசாமி அவர்களும் தோழர் P .சுப்ரமணியன் DE (ஒய்வு) அவர்களும் மற்றும் திரு நடராஜன் அவர்களும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு C .மகேந்திரன் MP அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள். நம் கோரிக்கையான ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் நமக்கும் ஓய்வூதிய மாற்றம் செய்ய வேண்டும் என்பதை  நன்கு விளக்கிவிட்டு நம் கோரிக்கை அடங்கிய மெமோரண்டம் ஒன்றினை அவரிடம் அளித்தார்கள். அவரும் பெற்றுக்கொண்டு " உங்கள் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து கொண்டேன்.உடனடியாக அமைச்சர் மாண்புமிகு மனோஜ் சின்ஹா அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் கடிதத்தை அவருக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார் .
தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர்.திருவேங்கடசாமி,
மாவட்ட செயலர் 
AIBSNLPWA 
கோவை மாவட்டம்.



No comments:

Post a Comment