Monday 17 December 2018



15 12 2018 அன்று அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வுதிய நலச்சங்க கோவை மாவட்ட எட்டாவது மாநாடு (முப்பெரும் விழா)திருச்சி சாலையில் உள்ள எஸ் என் அரங்கில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

 விழா தொடங்கும் முன் தேசியக்கொடியை தலைவர் குருசாமி அவர்களும் சமமேள க் கொடியை தோழர் ஆர் டி  ஆவர்களும் ஏற்றி விண்முட்டும் கொள்கை காக்கும்  கோஷங்கள் எழுப்பி மாநாடு சிறப்பாக தொடங்கிவைக்கப்பட்டது .
மகாநாட்டிலே சிறப்புரை ஆற்றியவர்கள் அகில் இந்திய  பொதுச் செயலாளர் கங்காதர் ராவ் .
அடுத்து  அகில இந்திய உதவித் தலைவர் தோழர் சுகுமாரன்.தொடர்ந்து  அகில இந்திய துணை பொது செயலர்
தோழர் முத்தியாலு மற்றும்  மாநில செயலாளர் ஆர் வி அவர்கள் . தங்கள் உரையில்  பென்ஸன்ர் தினம்   ஏன் கொண்டாடுகிறோம். அதன்   வரலாறு . இதற்கு விதிடடவர்கள் அது தந்த சலுகைகள் பற்றியும் ,
இன்றைய நிலையில் ஏழாவது சம்பளக் குழுவின் பரிந்துரையின்படி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு கடந்த 1 1 2017 வழங்கப்படவேண்டிய பென்ஷன் மாற்றம் (32சதம் மத்திய அரசு பணியாளருக்கு  தந்ததுபோல்) அதனுடைய தற்போதைய நிலை அதை விரைந்து முடிக்க நாம் செய்கின்ற கூட்டு முயற்சிகள் பிற 7 சங்கங்கள் உடன் இணைந்தபு .
 பிஎஸ்என்எல் ஓய்வூதியர்  மருத்துவ திட்டத்தில் உள்ள சமீபத்திய நிதி சிக்கல்கள் அவைகளை நீக்குவதற்கு நாம் செய்யும் ஏற்பாடுகள்.
 அடுத்தபடியாக வரும் ஏப்ரல் திங்கள் முதல் வரஇருக்கின்ற ஓய்வூதியத்தை மத்திய அரசின் cca மூலம் நேரடியாக வழங்கும் திட்டத்தின் சாதக பாதகங்கள் என்பதைப்பற்றி எல்லாம் அனைவரும் புரியும் வகையில் விளக்கமாக எடுத்து வைத்தார்கள் .
மாநில அளவில் தீர்க்கப்படட ஓய் வூ தியர்கள் பிரச்சனைக்ள் விவரம் தரப்பட்ட்து.

மதிய அறுசுவை உணவுக்கு பின் கோவை மாவட்டத்தின் செயலர் ஆண்டறிக்கை தந்தார் பொருளாளர் நிதிநிலை அறிக்கை தந்தார் பின்னர் பொருள் ஆய்வுக் கூட்டத்தில் ஓய்வூதிய பிரச்சினைகளை பற்றி அணிவரிடமும் கலந்தாய்வு நடந்தது.
 ஓய் வூதியர் நலம் காக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனைத்து ஊடகங்களுக்கும் முழு தகவல் தரப்பட்டது.

 அடுத்து புதிய நிர்வாகிகளாக தலைவர் குருசாமி அவர்களும் உபதலைவராக திரு பழனிச்சாமி அவர்களும் செயலாளராக ஆர் டி  அவர்களும் பொருளாளராக ஜெகதீசன் அவர்களும் மற்றும்  பிற நிர்வாகிகள் ,செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் . மாநாடு எல்லோராலும் பாராட்டப் படுகின்றது.அதை  மிகத் திறமையாக முன்னாள் மாவட்ட செயலாளர்  அருணாச்சலம் அவர்கள், தோழர்கள் கோட்டியப்பன், சிவகுமார் மாத்ருபூதம் சுப்பிரமணியம் சிதம்பரம் ராமகிருஷ்ணன் ,சோமு பிச்சமுத்து ,ஆம்புரோஸ் உதயகுமார் மற்றும் பிற மாவட்ட சங்க  நிர்வாகிகள் ஆகியோர் உதவியுடன்.
மாநாடு இனிதே நிறைவேறியது

No comments:

Post a Comment