Tuesday, 17 October 2017

அன்புநிறை தோழர்களே/தோழியர்களே ,
வணக்கம்.
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களை மாவட்ட சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஆண்டு பணியில் உள்ளோருக்கு குறைந்த பட்ச போனஸ் கிடைக்கும் என்று பெரிதாக நம்பினோம் .விடிந்தால் தீபாவளி ஆனால் தித்திக்கும் தீபாவளி பரிசாக போனஸ் அறிவிப்பு இன்னமும் வராத நிலை குறித்து கவலை கொள்கிறோம். சுமார் 80 நாட்களுக்கு மேல் போனஸ் தொகை பெற்று மகிழ்ந்தவர்கள்  நாம்.முதன் முதலாக பொதுத் துறையில் போனஸ் பெற்று மகிழ்ந்தோம் நாம். ஆயுத பூஜைக்கு முன் போனஸ் என்பது நம் இரத்தத்தில் ஊறிய வரலாறு . ஏனோ அரசின் பிடிவாத போக்கினால் போனஸ் நமக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இது மிக ஆழமான பாசத்துடன் கூடிய சோகம். எரிசாம்பலில் இருந்து விழித்தெழும் அக்கினி குஞ்சுகள் போல நம்முடைய தொழிற்சங்கங்கள் ஒன்று பட்டு இந்த போனஸை பெற்றாக  வேண்டும்..இதற்கான சங்க அமைப்பும் , வரலாறும் , தலைமையும் நம்மிடம் உண்டு.பெறப்போகிற இந்த போனஸ்தான் நாளைய நம் சம்பள மாற்றத்திற்கு அஸ்திவாரமாக இருக்கும்.
அன்புள்ள ஓய்வூதியர்களே , மாற்று சங்கத்தில் இருந்தாலும் கூட ஓய்வூதியர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஒன்றுபட்ட வேண்டும். 2000 க்கு முன்பாக ஒய்வு பெற்றுள்ள சுமார் 60 DOT ஓய்வூதியர்களுக்கு, ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று தேவையான ஆவணங்களை அவர்களிடம் இருந்து பெற்று இலாகாவிடம் நம் மாவட்ட செயலர், மாவட்ட பொருளாளர் , மாநில உதவி தலைவர் மற்றும் மாநில துணை செயலர் ஆகியோர் சேர்த்துள்ளனர். பல ஓய்வூதியர்கள் ஆவணங்களில் Last Pay Drawn தகவல் இல்லை.அப்படிப்பட்ட தோழர்கள் தங்களிடம் உள்ள file களில் தேடி எடுத்து சேர்ப்பிக்க வேண்டும்.குறிப்பாக தோழர்கள் ஜாய் மானிட்டர் ,வெங்கடாசலம் JTO , வெங்கிடுசாமி , E.K. சுப்ரமணியம் அம்மணி அம்மாள் மறைந்த கந்தசாமி (MP ) பொள்ளாச்சி சந்திரா சிதம்பரம், ஆகியவர்களின் ஆவணங்கள் பெறப்பட்ட வேண்டும்.
இன்னும் நம் தோழர்களுக்கு தெரிந்த , விடுபட்டுப்போன DOT ஓய்வூதியர்கள் எவரேனும் கோவை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் இருந்தால் , நம் தோழர்கள் அவர்களை அணுகி பெற்றுத்தர வேண்டுகிறோம்.
மெடிக்கல் அலவன்ஸ் விஷயமாக CAO விடம் விசாரித்த வகையில் சுமார் 1000 பேர்களுக்கு வழங்கிட ஒப்புமைக்காக அனுப்ப பட்டுள்ளது.ஆனால் சென்னை STR , நெல்லை STR , சென்னை தொலைபேசி மாவட்டம் போன்ற பகுதிகளில் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு தவணைகளையும் ஒன்றாக பெற மாநில சங்கம் முயற்சிகள் எடுத்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மருத்துவ பில்கள் சுமார் 12 பேர்களுக்கு Sanction ஆகி உள்ளது. Vendor Code ல் பதிவு செய்வதில் சிறு சிக்கல் Software பகுதியில் இருப்பதால் நிர்வாகம் அதனை சரி செய்வதில் முனைந்துள்ளது.
78.2% நிலுவைத்தொகை வழங்கப்படா நிலை குறித்து   கனரா வங்கி , கார்பொரேஷன் வங்கி தலைமை அலுவலகங்களுக்கு கடிதங்கள் எழுதி உள்ளோம் மேலும் தல மட்ட அதிகாரிகளுடன் பேசி CPPC க்கும் தகவல் அனுப்பப் பட்டுள்ளது.தோழர்கள் பொள்ளாச்சி பத்மா,சந்திராமுருகன், ருக்மணி,பெரியநாயக்கன் பாளையம் வெங்கடராமன் , ஈஸ்வரன் (IOB ) ஆகியவர்களுக்கு மீண்டும் பேசி பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.விடு பட்டுப்போன 78.2% Revision Order கோவை AO அலுவலகத்தில் உள்ளது. கிடைக்கப்பெறாதவர்களின் பெயர்களைக் சொல்லி நிர்வாகத்திடம் இருந்து Revised Order பெற முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
தோழர்களே நம் கோவை பகுதியில் சுமார் 300 க்கு மேற்பட்ட தோழர்கள் நிலுவைத்தொகை பெற்றுவிட்டனர். ஆனால் சுமார் 130 தோழர்கள் மட்டுமே நன்கொடை வழங்கி உள்ளனர்.இன்னும் , இன்னும் எதிர்பார்க்கிறோம் தோழர்களே .இது கோவை மாவட்டத்திற்கு அல்ல .பரந்து பட்ட அனைத்து bsnl ஓய்வூதியர்கள் அனைவரும் மிக்க ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் Pay Anomaly , 78.2% நிலுவை 01-01-2007 லிருந்து பெற ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் நம் பென்ஷன் மாற்றம் ஆகியவைகளை நாம் பெற , நீதிமன்ற செலவுகள் பல லட்சங்களைத் தாண்டும். இந்த அசுவமேத யாகத்திற்கு நம்முடைய பங்களிப்பு மிகவும் அவசியமானதொன்று.நன்கொடை கேட்டபோதெல்லாம் வாரிக் கொடுத்த ஓய்வூதியர்கள் நாம். கூட்டத்தை சிறப்பாக அறுசுவை உணவுடன் நடத்துவதும் நாம்தான். கேட்காமலேயே நன்கொடை வழங்கிய தோழர்கள் சங்கரன் ரூ 5000/-, ஜெயபால் ரூ 2000/-, சந்திர வள்ளி ரூ 2000/-, அருணாசலம் ரூ 2000/- B அருணாசலம் ரூ 2000/- இவர்களை பின்பற்றி அனைவரும் பங்களிக்கும்படி அனைவரையும் இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம்.
DOT Retirees 4 பேர்கள் தோழர்கள் வெங்கிடுசாமி, சிதம்பரம், சிகாமணி , E.K. சுப்ரமணியன் ஆகியோர் விரைவில் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைய ஒத்துக்கொண்டுள்ளனர். 
முக்கிய செய்தி :  அனைத்திந்திய மாநாடு 2019 ஏப்ரல் மாதம் புவனேஸ்வரில் நடக்க இருக்கிறது. அதில் கோவை மாவட்ட பகுதியில் இருந்து பெருவாரியான தோழர்கள்/தோழியர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு வந்தவுடன் நாம் பெருவாரியாக கலந்து கொள்ளலாம்.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட உதவி செயலர் தோழர் சிவக்குமார் முன்கை எடுப்பார்.
தோழர்களே நம் மாவட்ட செயற்குழு தோழர் குருசாமி அவர்கள் தலைமையில் 12-10-2017 அன்று கூடியது. 15 தோழர்கள் கலந்து கொண்டனர்.அதில் மாவட்ட செய்திகள், மாநில சங்க செயல்பாடுகள், மருத்துவ பில்கள்,நிதி நிலைமை, சிறப்பு ஓய்வூதியர் மாநாடு நடத்துவது சம்பந்தமாக பேசப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காலையில் நடை பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 9 தோழர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புலவர் கோவிந்தன் ரூ 1000/- கமலா பாலசுப்ரமணியன் ரூ 1000/-, பொள்ளாச்சி சம்பத் லட்சுமி ரூ 1000/-, பால் ராஜ் ரூ 1000/-, விஜயலட்சுமி ரூ 1000/- வழங்கினர் . 6 புதிய உறுப்பினர்கள் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைந்தனர். இவர்கள் அனைவரிடமும் இருந்து விண்ணப்ப படிவம், சந்தா மற்றும் நன்கொடை ஆகியவைகளை பெற்றுத்தந்த பொள்ளாச்சி பால் மாணிக்கம் அவர்களுக்கு நம் பாராட்டுக்கள் மற்றும் நன்றி.
மீண்டும் அனைவருக்கும் எம் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்.
இவண்
பி .அருணாசலம்.
மாவட்ட செயலர்,
AIBSNLPWA கோவை மாவட்டம். 
Sri. N Gurusamy, 2003 retiree has enrolled as new life member in our association today. Smt. Suseela and Kuppathal have donated  their 78.2 arrears contribution.
         Com. Paul Manickam is being Honoured with Ponnadai by President
                      Com.Sankaran DGM  Fin(R) Donates Rs 5000/-


No comments:

Post a Comment