அருமைத்தோழர்களே /தோழியர்களே,
அனைவருக்கும் வணக்கம்.
ஆகஸ்டு மாதம் பிறந்துள்ள நம் தோழர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இன்று (10-08-2017) காலை 10-00 மணி அளவில் நம் சங்க கட்டிடத்தில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.இம்மாதம் பிறந்தவர்களின் எண்ணிக்கை 30. அதில் 15 தோழர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
நம் மாவட்ட செயலர் இன்று உதகையில் நடைபெறும் அமைப்பு தின சிறப்பு கூட்டத்தில் பேருரையாற்ற சென்றுள்ளதால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை.
மாவட்ட தலைவர் தோழர் குருசாமி அவர்கள் தலைமை ஏற்று விழாவினை நடத்திக் கொடுத்தார்கள். தோழர் புலவர் கோவிந்தராஜ் அவர்கள் மிக அருமையாக விழாவினை வழி நடத்தினார்கள். 1941 ஆகஸ்டு மாதம் பிறந்துள்ள நம் மூத்த தோழர் துரைசாமி அவர்கள் கேக்கினை பெரு மகிழ்ச்சி ஆரவாரங்களுக்கிடையே வெட்டி கொண்டாட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி அவர்களை வாழ்த்தி தோழர்கள் ஆறுமுகம்,பொன்னுராஜ்,மயில்சாமி துரைராஜ் மற்றும் தோழியர்கள் காந்தினை மற்றும் P.V. இராஜேஸ்வரி ஆகியோர் பேசினார்கள்.
தோழர் ஜெகதீஸ்வரன் விழா முடிவில் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவேறியது.

No comments:
Post a Comment