Sunday, 23 April 2017


அன்பு தோழர்களே  / தோழியர்களே 
வணக்கம். நலம்தானே . கோடை வெய்யில் தன் உக்கிரத்தைக் காட்ட துவங்கி விட்டது, முதியோர்களாகிய நாம் நம் உடல் நலத்தை பேணி காத்துக்கொள்ள வேண்டும். 
நம்முடன் இலாகாவில் ஒன்றாக   பணிபுரிந்த தோழர்கள்  FNTO சங்கத்தைச் சார்ந்த  தோழர்கள் சண்முகம் , சாதிக் அலி மற்றும் V.K சின்னச்சாமி ஆகிய ஓய்வூதியர்கள்  நம் மாவட்ட அலுவலகம் வந்து ஆயுள் உறுப்பினராக தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர் . மறைந்த  தோழர் சேட் நந்தகுமார் அவர்களின் மனைவி திருமதி இந்திராணி அவர்கள் சென்னையை சேர்ந்த தோழர் R .சுப்பாராவ் அவர்களின் முயற்சியினால் நம் சங்கத்தில் ஆயுள்தார உறுப்பினராக சேர்ந்துள்ளார்.தொடர்ந்து FNTO  வைச்சார்ந்த  தோழர்கள் சுமார் 15 பேர்கள் இனி வரும் நாட்களில் நம்முடன் இணைய உள்ளனர், இணைந்துவிட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கூறி வரவேற்கிறோம். இணைய உள்ள தோழர்களை வருக வருக என இருகரம் நீட்டி வரவேற்க காத்திருக்கிறோம்.
We welcome our New Members 1.com.chinnathambi 2.Com.Shanmugham. 3.Com.V. K  Chinaswamy.  4.Com. Udhayakumar. 5. Com.Sadiq Ali.  Brithday Celebration to  85 years old Comrade who is awaiting Pension anomaly benefit .     
78.2சத நிலுவைத்தொகை போஸ்ட் 2007 இன்னமும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த ஓய்வூதியர்கள் யாருக்குமே இன்னமும் வரவில்லை. இது விஷயமாக DGM அலுவலகம் சென்று பேச்சு வார்த்தை நடத்தினோம்.உடனே DGM நிதி அவர்களும் சென்னை CCA அவர்களிடம்  தொடர்பு கொண்டார் .  எல்லா பைல்களையும் பைசல் செய்து வருகிறோம். எப்படியும் வரும் மே , ஜூன் மாதங்களுக்குள் எல்லாம் அனுப்பப்பட்டு விடும் என்று CCA உறுதி அளித்துள்ளார். சற்று பொறுத்திருப்போம் 
மெடிக்கல் பில்கள் க்ளைம் செய்வதற்கு ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் வாழ்நிலை (Life Certificate ) சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஏப்ரல் மாதம் முடிய இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. எனவே இதுநாள் வரை Life Certificate வழங்காதவர்கள் உடனடியாக வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ரசீது இல்லாமல் மருத்துவ Allowance பெற புதிய விண்ணப்பம் கொடுக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப மாதிரி இன்னும் சில தினங்களில் வெளியாகும். மாவட்ட சங்கத்தை இது விஷயத்தில் தொடர்பு கொள்ளவும். இந்த Allowance ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதத்திற்கானது . எனவே விரைந்து காரியமாற்ற வேண்டும்.
விரைவில் கூட்டப்பட உள்ள நம் கோவை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பல விஷயங்களை விவாதிக்க இருக்கிறோம்.
ஒரு மகிழ்ச்சி செய்தி ஏப்ரல் மாதம்    பணி ஒய்வு பெற உள்ள தோழர்களில் 5 தோழர்கள் நம்மிடம் வாழ் நாள்  உறுப்பினராக இணைய உறுதி அளித்துள்ளனர். தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி சுமார் 15 தோழர்கள் நம் சங்கத்தில் இணைவார்கள் என எதிர் பார்க்கிறோம். காலம் நேரம் பாராமல் அனைத்து தோழர்களுக்கும் தேவையான உதவிகளை தாராளமாக செய்துவரும் நம் சங்கத்தின் புகழ் மென்மேலும் பெருகி , பல தோழர்கள் நம்முடன் இணைந்து பணியாற்ற விழைகின்றனர்.
உடல் நலம் குன்றி கஷ்டப்படும் நம் முத்த தோழர் .ஜே.கே கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மெடிக்கல் பில் கிளைம் செய்ய வெண்டார் நம்பர் பெற உதவி புரிந்த நம் மாநில செயலர் தோழர் முத்தியாலு அவர்களுக்கு நன்றி நவின்று , 78.2 சத நிலுவை பெற பாடுபட்ட நம் சங்கத்தைப் பாராட்டி அவர் மகன் இராணுவ மேஜர் மூலமாக   ( இராணுவ Uniform ல் )சங்க அலுவலகம் வந்து ரூ 1000/- நன்கொடை  அளித்துள்ளார்.அவருக்கு நெஞ்சு நிறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் இராமகிருஷ்ணன் அவரது மனைவி தோழியர் கல்யாணி அவர்கள் 78.2 சத நிலுவைத்தொகை பெற்ற மகிழ்ச்சியுடன் தலா ரூ 1000/- நன்கொடை அளித்துள்ளனர். தோழர் புஷ்பவனம் அவர்கள் 78.2 சத நிலுவைத்தொகை பெற்றமைக்காக நன்றி பாராட்டி ரூ 1000/- நன்கொடை அளித்துள்ளார். நன்கொடை அளித்துள்ள அத்துணை தோழர்களுக்கும் ,தோழியர்களுக்கும் நம் நெஞ்சு நிறை நன்றியினை காணிக்கை   யாக்குகிறோம் .
நன்றி , மீண்டும் சந்திப்போம்.
தோழமை வாழ்த்துக்களுடன் 
B .அருணாசலம் 
மாவட்ட செயலர் 
AIBSNLPWA கோவை மாவட்டம்.

No comments:

Post a Comment