கோவை மாவட்ட AIBSNLPWA சங்கத்தின் முத்த தோழர் பொள்ளாச்சி P.R நாகராஜன் அவர்களின் மகன் திருமணம் சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. திருமண வரவேற்பு 29-01-2017 அன்று மாலை பொள்ளாச்சி Dr .வேலுசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது .மாவட்ட சங்கத்தின் சார்பில் தோழர்கள் அருணாச்சலம் , திருவேங்கடசாமி , தண்டபாணி மற்றும் பல முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
மணமகன் செல்வன்..சந்தோஷ். மணமகள் செல்வி : அர்ச்சனா
தோழர் நாகராஜன் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டிற்கு குடும்ப சூழல் காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை. எனவே தன் பங்காக ரூ 1000/- மாநில மாநாட்டு நிதியாக மாவட்ட செயலரிடம் அளித்துள்ளார்.
78.2% IDA நிலுவைத்தொகைக்கான உத்தரவை பெற்றுக்கொண்டு ரூ 1000/- நன்கொடையாக அளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் 78.2 சத நிலுவைத்தொகையினை பெறுவதற்கு முன்பாகவே நன்கொடை அளித்த முதல் தோழர் நாகராஜன் தான் . அவருக்கு நம் நெஞ்சுநிறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கோவை மாவட்டத்தில் தபால் ஆபீஸ் மூலமாக ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியர் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.. ராமநாதபுரம் - 40 பேர்கள் , குனியமுத்தூர் - 47 மற்றும் கவுண்டன் பாளையம் -17 மற்றும் பல தபால் ஆபீஸ் மூலம் பணம் பெறுகின்ற ஓய்வூதியர்கள் நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் ரூ 2000/, அல்லது ரூ 3000/- மட்டும் பெற்று மிகுந்த அல்லலுக்கு ஆளாகின்றனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை , நடந்து நடந்து கால்கள் தேய்ந்து மனம் நொந்து போனதுதான் மிச்சம். மாவட்ட சங்கமும் பல முறை தபால் நிலைய கண்காணிப்பாளரையும் . பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தையும் அணுகி முறையிட்டும் போதிய பணம் தபால் ஆபிஸுக்கு , சரியான நேரத்தில் அனுப்பப்படவில்லை. இப்பிரச்சினையை மாநில நிர்வாகம் கையிலெடுத்து தலைநகரில் CPMG அவர்களை சந்தித்து ஆவண செய்ய வேண்டுமென்று மாவட்ட சங்கம் விழைகிறது.விரைவில் இப்பிரச்சினை தீர்ந்து அவர்கள் முகத்தில் மகிழ்சி நிலவும் என்று நம்புகிறோம்.
மற்றுமோர் முக்கிய செய்தி : சுமார் 500 தோழர்கள் Pension Revision Order -ஐ Pay Bill Section -ல் பெற்றுக்கொண்டு ,நம் சங்க அலுவலகம் வந்து தங்களுக்கு வர இருக்கிற நிலுவைத்தொகை குறித்த விபரங்களை தோழர் சிவக்குமார் ( மாவட்ட துணைசெயலர் ) மற்றும் தோழர் ஜெகதீஸ்வரன் ( மாவட்ட பொருளாளர்) மூலம் கணக்கிடப்பட்டு மன மகிழ்வுடன் பெற்று சென்றனர். இன்னும் அதை வாங்காத தோழர்கள் சிரமம் பாராமல் PAY REVISION ORDER -ஐ கோவை மெயின் தொலைபேசி அகத்தில் உள்ள Pay Bill Section -ல் பெற்று செல்லவும். அப்போதுதான் வங்கியில் நிலுவைத்தொகை அளிக்கும்போது நம்மால் சரிபார்க்க முடியும்.
கோவைப்பகுதியைச் சார்ந்த STR ,STP தோழர்களுக்கு இன்னமும் Pension Revision Order வரவில்லை.
15 தோழர்களுக்கு வங்கிக்கு தாக்கீது வந்த பிறகும் நிலுவைத்தொகை அவர்கள் கணக்கில் Credit செய்யப்படவில்லை இத்தாமதத்தினைத் தவிர்த்திட ஆவண செய்ய வேணுமாய் மாநில சங்கத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தோழர்களே ஒரு இரங்கற் செய்தி.
தோழர் பங்கஜாக்ஷன் Sr . TTA (ஒய்வு) (RROC கோவை) அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் நம் சங்கத்தின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் . கான்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் நம் மாநில மாநாட்டிற்கு வந்திருந்தார். நம் மாவட்ட செயலர் அவரிடம் " உணவுண்டீர்களா?" என வினவினார். உடனே அவர் மிகுந்த மன நெகிழ்ச்சியுடன் " இந்த மாநாடு கடந்த காலங்களில் நடைபெற்ற மாநாடுகளைப்போல மன நிறைவாக இருக்கிறது என்று நெகிழ்ந்து போய் கூறினார். அவரை இழந்து வாட்டும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 78.2 சத நிலுவை த்தொகை பெறவும், ஓய்வூதியம் மாற்றப்பட்டு குடும்ப ஓய்வூதியம் பெற்றிடவும் மாவட்ட சங்கம் வேண்டியவற்றை விரைந்து செய்யும்.
தோழர்களே நம் தமிழ் மாநில சங்கம் அனுப்பியுள்ள இரண்டு சுற்றறிக்கைகளும் விரைவில் எல்லோருக்கும் விநியோகிக்கப்பட உள்ளது ( அவை இணையதளத்தில் post செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெட் வசதி உள்ள தோழர்கள் உடனடியாக காணலாம்) சுற்றறிக்கையை படித்த பின் நம் சங்கம் செய்துள்ள முயற்ச்சிகளை மற்ற தோழர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி நம் சங்கம் போல் வேறு சங்கம் எதுவும் இல்லை என்பதை வலியுறுத்திக்கூறி அவர்களையும் நம் சங்கத்தில் உறுப்பினராக ஆக்க வேண்டும். சுமார் 151 முறை RTI (தகவல் அறியும் வசதி) மூலமாக தகவல்களை பெற்று போராடி ,வாதாடி பெற்றதுதான் 78.2சத இணைப்பு மற்றும் 60:40 பார்முலா தகர்ப்பு.. ஓய்வூதிய அனாமலியில் சிக்குண்டோர் எண்ணிக்கை 4230 பேர்கள் என்று தகுந்த பட்டியலுடன் நிர்வாகத்திற்கு எடுத்துக்கூறினோம்.
பென்ஷன் அனாமலியை தகர்க்க CAT -ல் பல லட்ச ரூபாய்களை செலவு செய்து சங்கத்தை சார்ந்த , சாராத , தெரிந்த தெரியாத அத்துணை தோழர்களுக்கும்,தோழியர்களுக்கும் நல்லதொரு தீர்ப்பினை பெற்றுத் தந்தது ஒரு இமாலய சாதனையாகும். இந்த பென்ஷன் அனாமலி நீங்கியதன் மூலம் கோவை மாவட்டத்தையில் 25 தோழர்கள் பயனுறுவர். இவர்களில் இருவர் ஏற்கனவே இயற்கை எய்தி விட்டனர். 7 தோழர்களுக்கு இருப்பிட மறிந்து தகவல் கொடுத்துள்ளோம். மீத முள்ளவர்களுக்கு அவர்கள் இருப்பிடங்களை கண்டு பிடித்து தகவல் விரைவில் கொடுக்கப்படும்.
பெற்ற வெற்றியை கொண்டாடுவோம்! , பெற வேண்டிய வெற்றிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆவோம்.!!
வாழ்க நம் ஓய்வூதியர் நல சங்கம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdajAxbtsEYRGBRX1W4stOxsZB6zySLDAytWiQSrgN-ubhwOg5nbfYGcuAXbPpx9BjNpTzXcEVKxcBl9gFg-26D74WXMcUc_0j6PpSXqzyNmRJysx8ijlQcCP6vmx2IYhSV4C8MflXZygW/s200/band+master+animation.gif)