சென்னை STR கோட்ட ஆண்டுவிழா 18-10-2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநில தலைநகர் என்பதாலும் , மிக சிறப்பு வாய்ந்த கோட்டம் என்பதாலும் அதிகாரிகளும் , மத்திய சங்க தலைவர்களும் திரளாக வந்து பல முக்கிய செய்திகளை தெரிவித்தனர். அவற்றில் முக்கியமான செய்திகளை இங்கே தெரிவிப்பது நன்மை பயக்கும் என கருதி பதிவு செய்கிறோம்.
கடந்த 2014-2015 ஆண்டிற்கான போனஸ் தொகையாக ரூபாய் 3000/- வழங்குவதற்கான உத்தரவை BSNL நிர்வாகம் வெளியிட்டு விட்டது. 2014-15-ல் ஓய்வுபெற்ற நம் ஓய்வூதியர்களும் அவர்கள் பணியில் இருந்த காலத்திற்கான போனஸ் தொகையினை பெற தகுதி உள்ளவராவார்கள் .எனவே அவர்கள் கணக்கு அதிகாரிகளை சந்தித்து அவர்களது பெயர்களும் பயன்பெறுவோர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
பொதுசெயலர் தோழர் நடராஜன் அவர்கள் பேசும்போது 2006 க்கு முன்னர் ஒய்வு பெற்றவர்களுக்குPro Rata ஓய்வூதியம் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் Gratuity தொகையை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்துவது குறித்து பேசவும் DOT செயலரிடம் appontment கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார் . ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையில் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரூபாய் 9000/- ஆக உயர்த்தியுள்ளது .அதன் அடிப்படையில் BSNL ஓய்வூதியர்களுக்கும் அவ்வாறே அளிக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறோம். இது போன்ற கோரிக்கைகள் நிறைவேற நம்மிடையே ஒற்றுமை மிக முக்கியம் என்று ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் .
நம் கோவை மாவட்ட தோழர் அருணாச்சலம் தன் உரையில் மருத்துவ செலவுகளை திரும்ப பெறுவதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்கூறினார். கோவை மாவட்டத்தில் சுமார் 1300 ஓய்வூதியர்கள் உள்ளனர் 78.2 சத நிலுவைத்தொகை பெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன . தமிழ் மாநில மாநாடு கோவையில் நடத்தப்போகிறோம் என்று அறிவித்த உடனேயே கோவை மாவட்ட தோழர்கள் சுமார் எட்டு லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்ததை பெருமையுடன் எடுத்துரைத்து கைத்தட்டல்களைப் பெற்றார்
மாநில செயலர் தோழர் முத்தியாலு, நாம் AIBSNLPWA துவக்கிய பிறகுதான் நிவாகத்துடன் பேசி 68.8சத IDA பென்ஷன் பெற்றோம். இப்போது ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் ஓய்வூதிய மாற்றம் பெறுவோம் ,அதற்கான முயற்சிகள் செய்வோம் என்கிறார்.
மாநில தலைவர் தோழர் ராமராவ் , நம் சங்கம் மூலமாக குடும்ப ஓய்வூதியர்கள் பிரச்சினைகள் பல தீர்க்கப்பட்டு பல லட்சக்கணக்கான தொகையை நிலுவைகளாகப் பெற்றுள்ளனர். கோவை அருணாசலம் மெடிக்கல் இன்சூரன்ஸ் குறித்து பேசினார் ஆனால் அதைவிட BSNL MRS திட்டம் தான் சிறந்தது. இது குறித்து உறுப்பினர்களுடன் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும் என்றார் .
தோழர் DG தன் உரையில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அனந்தகுமார் அவர்கள் செய்துள்ள உதவியை பெரிதும் பாராட்டினார் . 78.2சத அடிப்படையில் நாம் பெற வேண்டிய பணிக்கொடை commutation, 01-01-2007 லிருந்து நாம் பெறவேண்டிய ஓய்வூதிய நிலுவைத்தொகை ஆகியவற்றை பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தமிழ்நாடு CCA தன் உரையில் 78.2சத நிலுவைத்தொகை கணக்கிடும் வேலைகள் துவங்கிவிட்டன . இதற்காக ஒரு தனி குழு அமைக்கப்பட்டு விட்டது. சுமார் 900 case வந்ததில் 360க்கு மேல் தீர்க்கப்பட்டு விட்டன . இன்னும் சுமார் 20,000 பென்ஷன் ரிவிசன் cases வரும் என எதிர்பார்க்கிறோம். பென்ஷன் அதாலத் க்கு 171 cases வந்துள்ளன சில case களை அதாலத் முன்பாகவே தீர்க்கப்பட்டு விடும் என நம்புகிறேன். இனி ஓய்வூதியம் வழங்கப்படும் முறையில் மாறுதல் இருக்கும். அதாவது DOT CELL மூலமாகவே ஓய்வூதியர்களின் வங்கி கணக்கிற்கு ஓய்வூதிய பணம் பட்டுவாடா செய்யப்படும். Life Certificate மற்றும் வருமான வரி பிடித்தம் ஆகியவற்றில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன , அவற்றை சரி செய்தபின்னர் இது நடைமுறை படுத்தப்படும் என்கிறார்.
இதுபோன்று இன்னும் பல சலுகைகள் பெற , நடைமுறைகளை இன்னும் எளிமைப்படுத்த பல கட்டங்களில் நம் சங்கம் பேசிவருகிறது. இவற்றில் வெற்றி பெற நம்மிடையே ஒற்றுமை அவசியம் .ஒய்வு பெற்ற அனைவரும் நம் சங்கத்தில் இணைய வேண்டும். சங்கத்தில் சேராத ஓய்வூதியர்களையும் சந்தித்து சாதனைகளை விளக்கி கூறி சங்கத்தில் இணையுமாறு அறிவுறுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் .சாதனைகளின் விளைநிலமாக இருக்கும் நம் கோவை மாவட்டம் இதிலேயும் முன்னோடியாக இருப்போம்.
வாழ்க நம் சங்கம் ! வளர்க்க நம் ஒற்றுமை !! ஓங்குக கொங்குநாட்டு பெருமை!!!
No comments:
Post a Comment